ஈரோடு மைதிலி.. அத்தனை பேர் முன்னாடி திருதிருன்னு விழித்து அசிங்கம்.. பட்டா மாறுதலா? மோசடி பத்திரம்?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. யார் இந்த பெண் அதிகாரி மைதிலி?
வீடு, நிலம், என எந்தவிதமான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அவைகளுக்கு பட்டா ஆவணம் மிகவும் முக்கியம்.. இந்த பட்டாக்களை உரிமையாளர்கள் எப்போதுமே பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.. இந்த பட்டா இருந்தால்தான், ஒருவரின் சொத்துக்கள் உரிமையானது என்பதற்கு அத்தாட்சியாகும்.

பட்டா: அதேபோல, உங்களுக்கு சொந்தமான பட்டாவில், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவாகியிருக்கும்.. இப்படி மிக முக்கிய ஆவணமான இந்த பட்டாவில், மோசடிகள் நடப்பது பெருகி கொண்டே வருகிறது.
அதாவது, போலியான பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன.. போலி பத்திரங்களை பயன்படுத்தி, இந்த மோசடிகள் நடந்து வருகின்றன.. இதனை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதேபோல, போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.
அடிக்கடி கைது: ஆனாலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அடிக்கடி கைதாகிறார்கள்.. அதிலும் பெண் அதிகாரிகளும் இப்போது லஞ்சம் வாங்குவதும், பொதுவெளியில் கைதாவதும் பெருகிவருவது கவலையை தந்து வருகிறது.
இதோ இப்போதுகூட ஒரு பெண், லஞ்சம் வாங்கியதற்காக கைதாகி உள்ளார்.. திருப்பூர் முத்தனம்பாளையம் கிராமம் ரங்கேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா.. 28 வயதான ஜீவா, ஒரு காய்கறி வியாபாரி.
ஆவணங்கள்: இவரது அப்பா ராஜேந்திரனை, கடந்த பிப்ரவரி 16ம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டார்கள். எனவே, இந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது... இதற்கு தேவையான ஆவணங்களை வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதில், வாரிசு சான்றிதழும் ஒன்றாகும்.
எனவே, வாரிசு சான்றிழ் கேட்டு, திருப்பூர் தெற்கு தாலுகா, நல்லுாரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்காக நல்லூர் வருவாய் ஆய்வாளரான மைதிலியை அணுகியிருக்கிறார்.. வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமானால், 2,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டாராம் மைதிலி.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிர்ச்சியடைந்த ஜீவா, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்களது யோசனையின் பேரில், வருவாய்த்துறை அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக ஜீவா கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், மைதிலியை கையும் களவுமாக கைது செய்தனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்தவர் இந்த மைதிலி.. 43 வயதாகிறதாம்.. முதலில் 7 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.. லஞ்சம் தர மாட்டேன் என்று ஜீவா சொல்லவும், படிப்படியாக லஞ்சப்பணத்தை பேரம் பேசி, ரூ.2 ஆயிரமாக குறைத்தாராம்.
நேற்று தூத்துக்குடி விளாத்திக்குளத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.. நிலத்துக்கு பட்டா கேட்டு சிவலிங்கம் என்பவர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருக்கிறார்.. ஆன்லைனில் விண்ணப்பம் செய்தும், 4,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று சர்வேயர் செல்வமாடசாமி கேட்டாராம்.. இவரையும் போலீசார் கைது செய்தனர்.
பெண் அதிகாரி: திருவண்ணாமலையிலும் நேற்று அதிகாரிகள் சிக்கியிருக்கிறார்கள்.. திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ரமேஷ் என்பவரிடம் சொத்து வரி மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம்.. இவர்களையும் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்..
இதில் சிக்கிய இந்த வருவாய் ஆய்வாளரும், ஒரு பெண் அதிகாரி ஆவார்.. இவரது பெயர் செல்வராணி.. பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி இப்படி அசிங்கமாக கைதாகி வருவது, வருவாய்த்துறையில் மட்டுமல்லாமல் தமிழகத்துக்கே அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications