திருப்பூரில் மோடி ஊர்வலம்.. திறந்த வேனில் பிரதமர் அருகே யாரு பாருங்க! கவனம் பெற்ற 2 தமிழக தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பாதப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். முன்னதாக பிரதமர் மோடி திறந்த வேனில் விழா மேடைக்கு ஊர்வலமாக வந்தார். அப்போது பிரதமர் மோடி அருகே தமிழகத்தை சேர்ந்த 2 தலைவர்கள் நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவினர் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

PM Modi arrives in an open van with Annamalai and L Murugan at the closing ceremony of En Mann Ek Makkal padayatra in Tiruppur

அதன்பிறகு இந்த யாத்திரை தமிழ்நாடு முழுவதுமாக நடந்தது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தான் யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வர ஒப்புக்கொண்டார். தமிழகமே வியக்கும் வகையில் மிகப் பெரியளவில் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. மாதப்பூர் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இன்று கேரளாவில் இருந்து பிரதமர் மோடி தமிழகம் வந்தார். சிறப்பு விமானத்தில் அவர் கோவை சூலூர் விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றார். அதன்பிறகு விழா மேடைக்கு திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். பிரதமர் மோடியுடன் தமிழகத்தை சேர்ந்த பாஜகவினர் 2 தலைவர்கள் நின்றனர்.

அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் ஆகியோர் மட்டும் பிரதமர் மோடியின் திறந்த வாகனத்தில் நின்று அவருடன் பயணம் செய்தனர். பிரதமர் மோடி வாகனத்தில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையசைத்தார். தொண்டர்கள் மலர்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரை ஆற்ற தொடங்கினார்.

இந்த விழாவுக்கான மேடை என்பது பாஜகவின் சின்னமான தாமரை வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. இது பாஜகவினரை ஈர்த்தது.
பிரதமர் மோடி வருகையையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+