திருப்பூர் அருகே ரூ 1.45 கோடிக்கு பனியன் துணிகளை வாங்கிவிட்டு தம்பதி தலைமறைவு! ஹைதராபாத்தில் கைது
திருப்பூர்: திருப்பூர் அருகே ரூ 1.45 கோடிக்கு பனியன் துணிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய தெலுங்கானா தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதி, ரூ 1.45 கோடிக்கு சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகளை கொள்முதல் செய்ததாக தெரிகிறது.

பொருட்களை வாங்கிச் சென்ற இவர்கள் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. பல முறை மகேஷ் ராமசாமி, அந்த தம்பதியை தொடர்பு கொண்டு கேட்ட போதும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகேஷ் புகார் கொடுத்திருந்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸார் தேடுவதை அறிந்த அந்த தம்பதி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து அவர்களை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடி வந்தனர்.
அப்போது ஹைதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications