Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின் கட்டண உயர்வு. .திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்ந்த தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அனுமதி வங்கியிருந்தது. இதன்படி கடந்த 10ம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு அக்கட்சியின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவும் இன்று போராட்டதை அறிவித்துள்ளது.

 கட்டண உயர்வு

கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வுப்படி வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் எந்த விதத்திலும் தடைப்படாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளுக்கான இதர மின் கட்டணம் 12-52 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதன் மூலம் ரூ.55 முதல் ரூ.1130 வரை கட்டண உயர்வு இருக்கும். மட்டுமல்லாது மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரையில் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்

மாநில அரசின் நிதிச்சுமை மற்றும் மாநில மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் அதனை ஈடுகட்டவும் சரிசெய்யவும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று திமுக அரசு தெரிவித்துள்ளது. இது மின் கட்டணத்தோடு மட்டும் நின்றுவிடாமல், புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தையும் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்ததாகவும், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மின் கட்டணம் குறைவாகதான் உயர்த்தப்படுவதாகவும் மின் கட்டண உயர்வுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

வருவாய்

வருவாய்

புதிய கட்டணத்தில் மாற்றங்கள் இருந்தாலும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதில் 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்போர் அரசுக்கு எழுதி கொடுக்கலாம் என்றும் மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம் மூலமாக ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டம்

போராட்டம்

இந்நிலையில் இந்த மின் கட்டண உயர்வுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்து நடத்தியது. அதேபோல அதிமுக தரப்பிலும் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உற்பத்தி பொருட்கள் விலையுயர்வு ஆகியவற்றுடன் இந்த மின் கட்டண உயர்வும் அமலாகியுள்ளதால் விசைத்தறி தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாக கூறியுள்ளனர்.

 கோரிக்கை

கோரிக்கை

பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம், கோவை என கொங்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளிலும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் தங்களது கோரிக்கை மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+