"விபச்சாரம்".. உல்லாச வாழ்க்கைக்காக தோழிகளை அடமானம் வைத்த மாணவி.. அட்வான்ஸும் வாங்கியாச்சு..கலிகாலம்
நெருங்கிய தோழிகளையே விபச்சாரத்தில் ஈடுபட முனைந்துள்ளார் கல்லூரி மாணவி
திருப்பூர்: பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், சில பெண் குழந்தைகளே பகீர் காரியங்களை செய்யும்போது, அதிர்ந்தும், நிலைகுலைந்து போய்விடுகிறோம்.. அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் அந்த, பிரபலமான காலேஜ் செயல்பட்டு வருகிறது.. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
Recommended Video
இங்கு படிக்கும் மாணவிகள் சிலர், தங்களுடைய போட்டோக்களை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்...

விபச்சாரம்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இந்த கல்லூரி மாணவிகள் 2 பேரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.. எதிர்முனையில் பேசிய நபர்கள், இந்த 2 பெண்களையும் விபச்சாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது... இதனால் மாணவிகள் 2 பேரும் அதிர்ந்து போனார்கள்.. அதனால், இது பற்றி தங்களுடன் படிக்கும் தோழிகளிடம் கண்ணீருடன் இதை தெரிவித்தனர்... அத்துடன், கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் செய்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.

ஷாக் + தில்லுமுல்லு
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தரப்பில், மாணவிகளிடம் பேசிய அந்த மர்ம நபர்கள் யார் என்ற விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், அதே கல்லூரியில் படிக்கும் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது... திவ்யாவின் பெயரை கேட்டதுமே கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவிகளும் உறைந்து போயினர்.. பிறகு திவ்யாவிடம் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் அவரது அனைத்து தில்லுமுல்லு வேலைகளும் வெளியே வந்தது.

ஆண் நண்பர்கள்
திவ்யாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்களாம்.. ஆனால், காலேஜில் பல மாணவிகளிடம் சகஜமாக பேசி பழகியுள்ளார்... இவரது பழகும் விதம், அனைத்து மாணவிகளுக்கும் பிடித்து போய்விட்டது.. அதனால், மாணவிகள் தங்கள் செல்போன் நம்பர்களை திவ்யாவிடம் பரிமாறி கொண்டிருக்கிறார்கள்.. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திவ்யா, அங்கு படித்து வந்த சீனியர் மாணவிகள் 2பேரின் போட்டோக்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில் இருந்து டவுன்லோடு செய்து அதனை தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு, அனுப்பி வைத்துள்ளார்.. அத்துடன் மாணவிகளின் செல்போன் நம்பரையும் அனுப்பி வைத்துள்ளார்.

அட்வான்ஸ்
அந்தவகையில், மாணவிகள் 2 பேரிடமும் பேசிய திவ்யாவின் ஆண் நண்பர்கள் விபச்சாரத்திற்கு அழைத்து, அதற்கு விலையும் பேசியுள்ளனர்.. அதுமட்டுமல்ல, இதற்காக திவ்யா, அந்த ஆண் நண்பர்களிடம் முன்கூட்டியே அட்வான்ஸ் பணமும் பெற்றுள்ளார்... இதையடுத்து திவ்யாவின் செல்போனை கல்லூரி நிர்வாகத்தினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.. அப்போது, நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் போட்டோக்களை திவ்யா அதில் வைத்திருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். எனவே உடனடியாக திவ்யாவை கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.

சைபர் கிரைம்
இப்போது, திவ்யாவால் எத்தனை மாணவிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்? அந்த ஆண் நண்பர்கள் யார்? என்ற விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், இவ்வளவு விசாரணைகளையும், கல்லூரி நிர்வாகம் மட்டுமே நடத்திமுடித்து கண்டுபிடித்துள்ளது.. இதுவரை போலீசுக்கும் போகவில்லை.. புகார் எதுவும் செய்யப்படவில்லை... ஆனாலும் திவ்யாவுடன் தொடர்பில் இருந்த ஆண் நண்பர்கள் யார்? இதுவரை திவ்யாவால் அனுப்பப்பட்ட சக மாணவிகளின் போட்டோக்கள் ஏதாவது விபச்சார கும்பலிடம் உள்ளதா? என்று சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆபத்து
வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இளம்பெண்கள் போட்டோக்களை பதிவிடுவதும், சொந்த விவரங்களை பதிவிடுவதும் ஆபத்து என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.. காரணம், இவைகளை பயன்படுத்தி, பண மோசடி, பாலியல் ரீதியான தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதும் நிகழ்ந்து வருவது கலக்கத்தை உண்டுபண்ணி உள்ளது.. நெருங்கிய தோழிகளின் போட்டோக்களை பயன்படுத்தி விபச்சாரத்தில் தள்ள முயன்ற கல்லூரி மாணவியின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications