என்னை கொல்ல வராங்க.. அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுங்க ஸ்டாலின் ஐயா!.. ரவுடி பேபி சூர்யா கோரிக்கை
திருப்பூர்: 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா புகார் அளித்துள்ளார். அத்துடன் தமிழக அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
Recommended Video
திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருப்பவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது வீடியோக்களால் இவர் ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார்.
இதையே தனது பெயராக மாற்றி கொண்டார். இவர் நேற்றைய தினம் ஒரு புகாரை அளித்துள்ளார்.

பணப்பரிமாற்றம்
அதில் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகவும் அதற்காக ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

சூர்யாதேவி
மேலும் சென்னையை சேர்ந்த சூர்யா தேவி என்ற அவர் தன்னைப் பற்றி அவதூறாக முகநூலில் பதிவு விடுகிறார். அவர் திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

வீடு கட்டி
மேலும் தனக்கு சொந்தமாக தமிழக அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் ரவுடி பேபி சூர்யா. இதனிடையே சமூகவலைதளங்களில் அண்மைக்காலமாக ஆபாச பேச்சு வீடியோக்களை பதிவு செய்வதாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பிக்கு வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இணைய சேனல்கள்
அதில் ஜிபி முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்கிற சிக்கந்தர் ஆகியோர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவு செய்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளனர். இவர்களது வீடியோக்கள் தமிழகத்தில் கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் என்பதால் அவர்களது இணையதளங்கள் தடை செய்யப்பட வேண்டும் என புகார் அளித்துள்ளது. மேலும் இதன் நகலை முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications