எலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்
திருப்பூர் அருகே எலிகளை பிடித்து சிறுவர்கள் சமைத்து உண்கிறார்கள்
Recommended Video
திருப்பூர்: "நாங்க எலிகளை புடிச்சி வறுத்து அப்படியே சாப்பிடுவோம் சார்.." என்று சொல்லும் சிறுவர்களின் பேச்சை கேட்டு வெளியூர்வாசிகள் திகைத்து போய் நிற்கிறார்கள்.
திருப்பூரை அடுத்த பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களம் அருகே உள்ளது வேலம்பாளையம். இப்பகுதியில் கல்குவாரிகள் அதிகம். அதனால் இங்கு கூலித்தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் வசித்துவருகின்றனர்.
இவர்கள் காலையில் வேலைக்கு சென்றுவிட்டால், சாயங்காலம் தான் வீடு திரும்புவது வழக்கம். இதனால் இவர்களது குழந்தைகளை யாருமே கவனிப்பதும் இல்லை, அவர்களை முறையாக பராமரிப்பதும் இல்லை.

வயல்வெளி
அப்பா, அம்மா வேலைக்கு போய்விடுவதால் இந்த பிள்ளைகளும் ஸ்கூலுக்கு போவது கிடையாதாம். இந்த கல்குவாரியை ஒட்டி விவசாய நிலங்களும் உள்ளன. அந்த வயல்வெளிகளுக்கு சிறுவர்கள் சென்றுவிடுகிறார்கள்.

எலிகள்
அங்கு ஓடியாடும் எலிகளை துரத்தி பிடிக்கிறார்கள். அந்த எலிகளையும் அங்கேயே கொன்று அதனை சமைத்து சாப்பிடுகிறார்கள். இதனை அப்பகுதி மக்கள் யாருமே கண்டு கொள்வதில்லை என்று தெரிகிறது.

நோய்கள்
இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்ததுடன், ஒரு சிறுவனையும் கூப்பிட்டு கேட்கிறார். இந்த எலிகளை பிடித்து என்ன செய்வீர்கள் என்று. அதற்கு அந்த சிறுவன், "அப்படியே வறுத்து சாப்பிடுவோம்" என்று வெள்ளை சிரிப்புடன் சொல்கிறான். இது போன்று எலிகளை பிடித்து கொன்று சாப்பிட்டால் எத்தனையோ விதமான நோய்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

கோரிக்கை
இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மேற்படி மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications