நான் என்ன தம்பி அண்ணாமலையா? எனக்கு எதுக்கு இதெல்லாம்? சீமான் பேசியதும் தம்பிகளின் சிரிப்பலை
திருப்பத்தூர்: நான் என்ன தம்பி அண்ணாமலையா என திருப்பத்தூரில் நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் பேசிய சீமான் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சீமான் பேசியதாவது: நான் முதல்வன் - அய்யா ஸ்டாலின் காலை உணவு திட்டத்தில் உப்புமா கொடுக்கிறார். அதை நீங்கள்எடுத்து சாப்பிட்டால் உங்கள் உடம்புக்கு ஒட்டுமா? திமுக ஒரு உப்புமா கம்பெனி. முதல்வர் காலை 9 மணிக்கு வருகிறார் என்றால் சாலையில் காலை 6 மணி முதலே போலீஸார் பந்தோபஸ்துக்கு நிற்கிறார்கள்.

அவர்களால் இயற்கை உபாதைகளை கூட கழிக்க இயலாத சூழல் நிலவுகிறது. இது மாதிரி உலகில் ஒரு மனித வதை, கொடுமை இருக்கிறதா சொல்லுங்கள். சொந்த நாட்டில் நடமாட எதுக்கு இத்தனை பாதுகாப்பு. நான் பாருங்கள் இத்தனை ஆயிரம் பேருக்கு நடுவில் பேசுகிறேன். எனக்கு என்ன பிரச்சினை?
நான் என்ன என் தம்பி அண்ணாமலையா, இசட் பிரிவு ஒய் பிரிவு பாதுகாப்பெல்லாம் வச்சிக்கிட்டு போறதுக்கு? நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக்கெதுக்கு பாதுகாப்பு? அதிகாரம் இல்லாமல் 2 சீட்டு, 3 சீட்டு வச்சிக்கிட்டு என்ன செய்யுறது. கடந்த தேர்தலில் நான் இஸ்லாமியர்களுக்கு இடம் கொடுத்தேன், திமுக எத்தனை வாக்கு கொடுத்தது, ஆனால் நீங்கள் எனக்கு எத்தனை வாக்கு போட்டீங்க, திமுகவுக்கு எத்தனை போட்டீங்க
கள்ளுக்கடை இல்லை, பனம்பால், தென்னம்பால் மூலிகை சாறு கடைகளை திறப்போம். வீரப்பன் இருந்த போது காட்டுக்குள் மரங்கள் பாதுகாப்பாக இருந்தன. வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சினை வந்திருக்குமா என யோசித்து பார்க்க வேண்டும். நாகப்பாவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா, அதுதான் தமிழன் மாண்பு, என சீமான் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இசட் பிரிவில் அண்ணாமலையை சுற்றி 22 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். அண்ணாமலையின் வீடு, தங்கும் இடம், அவர் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் அவருக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள், மிரட்டல், அச்சுறுத்தல் காரணமாக இந்த வகையான பாதுகாப்பை அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications