நாட்டிலேயே தெற்கு ரயில்வே இதில் முதலிடம்.. அன்ரிசர்வ்டு ரயில் பெட்டிகளில் பயணிப்பவர்களால் சர்ப்ரைஸ்
திருப்பூர்: முன்பதிவு தேவையில்லாத ரயில்களில், குறைந்த கட்டணத்தில் அதிகமானோர் செல்வதற்கு வசதியாக, அதிக பெட்டிகளை இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் குட்நியூஸ் ஒன்றினை ரயில்வே வெளியிட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணித்தவர்களால் கிடைத்த வருவாய் குறித்தும் மகிழ்ச்சி தகவலை ரயில்வே பகிர்ந்து கொண்டிருக்கிறது.
வார விடுமுறை நாட்களில் ரயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளன.

முக்கியமாக , வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இதுபோன்ற சிக்கல்கள் அதிகமாக கிளம்பின. ரிசர்வேஷன் செய்யப்பட்ட பெட்டிகளில், ரிசர்வ் செய்யப்படாத பயணிகள் அடாவடியாக ஏறி பயணிப்பதும், தங்களது உடைமைகளை கொண்டு சீட்டுகளை ஆக்கிரமிப்பதும் என அத்துமீறல்களில் ஈடுபட்டு விடுவதாக புகார்களும் கிளம்பின.
அன்ரிசர்வ்டு பெட்டிகள்
இதுகுறித்த வீடியோக்களையும், பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள் வெளியிட்டிருந்த நிலையில், அன்ரிசர்வ் பெட்டிகளை ஆக்கிரமிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே அதிரடியாக சமீபத்தில் அறிவித்தது.
மேலும் இது தொடர்பான புகார் இருந்தால் 139 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்றும், ரயில் நிலையங்கள், ரயில்களில், பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தது.
இதற்கெனவே டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் அடங்கிய 50 சிறப்பு குழுக்களை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.. இவர்கள் ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறி, முன்பதிவு செய்யாமல் பயணிப்பவர்களிடம் 1000 ரூபாய் அபராதத்தையும் விதித்து வருகிறது.. ரயில்வேயின் இந்த நடவடிக்கையானது, பயணிகளுக்கு நம்பிக்கையை தந்து வருகிறது.
ரிசர்வேஷன் பெட்டிகள்
இப்படிப்பட்ட சூழலில், ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உயர்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது..
தெற்கு ரயில்வேயில் 1400 ரயில்களில் இயக்கப்படும் நிலையில், 21.50 லட்சம் பேர் தினந்தோறும் பயணித்து வருகிறார்கள். எனவே, கூடுதல் ரயில்கள் இயக்கம், பெட்டிகள் இணைப்பு அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளையும் ரயில்வே எடுத்து வருகிறது.
குட்நியூஸ் - ரயில்வே வருவாய்
அந்தவகையில், முன்பதிவு தேவையில்லாத ரயில்களில், குறைந்த கட்டணத்தில் அதிகமானோர் செல்வதற்கு வசதியாக, அதிக பெட்டிகளை இணைத்து இயக்கவும், தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணித்ததன்மூலம், 1200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே குட்நியூஸ் அறிவித்துள்ளது.. இந்த வருவாயானது, கடந்த வருடத்தைவிட 6 சதவீதம் அதிகம் என்கிறார்கள்.
முன்பதிவு இல்லாத பெட்டிகள்
இது குறித்து, தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தெற்கு ரயில்வேயில், பயணியர் பிரிவு வருமானம் 70 சதவிகிதமாகவும், சரக்கு பிரிவு வருவாய் 30 சதவீதமாகவும் உள்ளது. இதன்காரணமாகத்தான், பயணிகளின் வசதியை உயர்த்தி, ரயில்களை கூடுதலாக இயக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே, நடப்பாண்டில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 77.41 கோடியாகவும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 66.79 கோடியாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்..
நாட்டிலேயே முதலிடம்
இந்த 7 மாதங்களில் மட்டும், 45 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 44.70 கோடி பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.
அனைத்து விரைவு ரயில்களிலும், தலா 4 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை, 261 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைத்துள்ளோம். நாட்டிலேயே தாமதமின்றி ரயில்கள் இயக்குவதில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் உள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications