ஆ.ராசாவை பக்கத்தில் வைத்திருந்தால்.. என்ன நடக்கும் தெரியுமா? முதல்வருக்கு ஜீயர் வைத்த கோரிக்கை!
திருப்பூர்: இந்து மக்கள் மற்றும் இந்து கடவுள்களை அவதூறாக பேசுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வலுவான முயற்சிகளை மேற்கொண்டதிலிருந்து இந்து மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும், மதத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படையான விஷயங்கள் குறித்தும் பொது வெளியில் தீவிரமான விவாதங்கள் தொடங்கின.
இவ்வாறு இருக்கையில் திமுக தலைவர்களே இந்த விவாதத்தை முன்னெடுத்திருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் இந்த கருத்தை ஜீயர் கூறியுள்ளார்.

பாஜக
இந்து மதத்தில் இருக்கும் பல்வேறு பழமைவாத கருத்துக்களை மதத்தின் உள் இருந்தே பலர் எதிர்த்து வந்தனர். இதன் காரணமாக இந்து மதம் பெரும்பான்மை மக்களுக்கானதாக தன்னை தகவமைத்துக்கொண்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கையில் மதப் பெரும்பான்மையினரின் வாக்கு வங்கியை மையப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் பாஜக தமிழ்நாட்டில் தனது இருப்பை பலப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

கருத்து மோதல்
பாஜகவின் இந்த சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுபவர்கள், இந்து மதத்தில் இன்றளவிலும் நீடித்து வரும் வர்ணாசிரம கொள்கை, சாதிய அடுக்கு முறை, ஆண்/பெண் பாகுபாடு ஆகியவை குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். 'கறுப்பர் கூட்டம்' என யூடியூப் சேனல்கள் தொடங்கி திமுக எம்பி ஆ.ராசா வரை இந்து மதத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினர். ஆனால் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் இந்த கருத்துக்களுக்கு பதில் சொல்வதற்கு மாறாக அதை வெளிப்படையாக பேசுபவர்கள் மீது விமர்சனங்களை முன் வைக்கத் தொடங்கினர்.

ஜீயர் பேட்டி
இதில் ஆ.ராசா சமீபத்தில் கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதாவது, யாரெல்லாம் இந்துக்கள் என இந்து மதத்தின் புனித நூலான மனுஸ்ருமிதி எவ்வாறு வகைப்படுத்தியுள்ளது என்பது குறித்து விளக்கமாக கூறினார். இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் "இந்து மக்கள் மற்றும் இந்து கடவுள்களை அவதூறாக பேசுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் வேண்டும்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருப்பதி கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் ஆராதனை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றப் பின்னர் அவர் இவ்வாறு பேசியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "இந்து மதத்தை அவதூறாக பேச தற்போது நிறைப்பேர் கிளம்பியிருக்கிறார்கள். ஆ.ராசா போன்றோரை முதலமைச்சர் அருகில் வைத்துக்கொண்டால் அவருக்கும் அவப்பெயர் உண்டாகும்." என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications