நிறைய பட்டன் இருந்ததால் நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. உடனே பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!
திருப்பூர்: திருப்பூர் அருகே, நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த பெண் காவலர் ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு இன்று
தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுக்கு ஒரு முறை இந்த நீட் தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 44 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
கடும் கட்டுப்பாடுகள்
இன்று பிறபகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதலே மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் வந்து நீட் தேர்வு நடக்கும் மையங்களின் வளாகங்களில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11.30 மணி முதல் தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண் தேர்வர்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது எனவும், பெண் தேர்வர்கள் துப்பட்டா அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷூ, வாட்ச், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.
ஆடை கட்டுப்பாடு
மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை அணியக் கூடாது. மேலும், ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள், காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாணவிக்கு அனுமதி மறுப்பு
திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. 3,212 மாணவ மாணவிகள் திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி அணிந்திருந்த ஆடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெண் காவலரின் நெகிழ்ச்சி செயல்
தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்து, மீண்டும் அழைத்து வந்து நீட் தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து விட்டார்.
இதையடுத்து, அந்த மாணவி, நீட் தேர்வு எழுத, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். திடீரென தேர்வு அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவி நிலைகுலைந்து போன நிலையில், உடனடியாக பெண் காவலர் அந்த மாணவியை அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் அங்கிருந்தவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications