Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூருக்கு சூப்பர் சான்ஸ்.. குடும்ப அட்டைதாரர்களே, 10ம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க.. உடுமலைக்கு குஷி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. அதிலும், அனைத்து அட்டைதாரர்களுக்கு மிக குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், ரேஷன் கார்டுதாரர்களின் பிரச்சனைகளும் மாத மாதம் தீர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்துக்கு குட்நியூஸ் வந்துள்ளது

பொதுவினியோக திட்டத்திலுள்ள சிறு சிறு குறைகளை சரிசெய்யவும், ரேஷன்தாரர்களின் புகார்கள், குறைகளை கேட்டு உடனுக்குடன் அவைகளுக்கு தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Tiruppur Ration Udumalaipettai

திருப்பூருக்கு குட்நியூஸ்

இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும்போது, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாரை சொல்லுதல் போன்றவற்றுக்காக இப்படியான முகாம்களை அரசு நடத்துகிறது.

இந்த முகாம்களில் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது குறைகளையும், புகார்களையும், அதிருப்திகளையும் தெரிவித்து, அவைகளை சரிசெய்து கொள்ள முடியும். குறைதீர்ப்பு முகாம்களை தமிழக அரசு ஒவ்வொரு மாதமும், மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகிற 10-ந்தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்துக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது..

குறைகேட்பு கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைகேட்பு கூட்டம், அனைத்து வட்டங்களிலும், வரும், 10ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற உள்ளது இந்த முகாமில், குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று, முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண உள்ளனர்.

அவிநாசி தாலுகாவில் புதுப்பாளையம், தாராபுரம் - காங்கயம்பாளையம், காங்கயம் - ஆலம்பாடி, மடத்துக்குளம் - நீலம்பூர், பல்லடம் - கரடிவாவி, திருப்பூர் வடக்கு தாலுகா - நெருப்பெரிச்சல், உடுமலை - போடிப்பட்டி, ஊத்துக்குளி - குன்னத்துார் ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், ஸ்மார்ட் கார்டுகள் குறித்த கோரிக்கைகளை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுமலை விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி

இதனிடையே, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம், வரும், 10ம் தேதி, காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, மடத்துக்குளம் தாலுகா, நீலம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கிறது.

உடுமலை தாலுகாவில், போடிபட்டி தொடக்கவேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், நகல் அட்டை கோரும் மனு கொடுத்து, உடனடி தீர்வு பெற்றுக்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

அதேபோல உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 14ம் தேதி நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 14 ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+