திருப்பூரில் பெண் இன்ஸ்பெக்டர் மாயம்? குடும்ப பிரச்சினை காரணமா? ஆடியோவால் பரபரப்பு!
திருப்பூரில் பெண் இன்ஸ்பெக்டர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லம் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லம். இவர் நேற்று இரவு முதல் காணவில்லை என சமூகவலைதளங்களில் ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு 8.45 மணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு காரில் வந்தார். அதன் பிறகு அந்த கார் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
திண்டுக்கல் பகுதியில் சென்ற போது அந்த கார் மாயமானது. அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அவரது எண் சுவிட்ச் ஆப் என வருகிறது. இதையடுத்து அவரது தோழியான மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதனா சக போலீஸாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அவரது புகைப்படத்தை அனுப்பி கண்டிக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார் என தெரிகிறது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் செல்லம் கிடைத்துவிட்டார் என மற்றொரு பதிவையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தாராபுரம் டிஎஸ்பி தனராசுவிடம் கேட்டபோது மாயமானதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் செல்லம் குடும்ப பிரச்சினை காரணமாக விடுப்பில் சென்றுள்ளார். இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். எனக்கு தெரியாது என கூறினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications