காப்பாத்துங்க.. காட்டுக்குள் "அலறல்".. ஆடையின்றி ஓடி வந்த பெண்.. தேடிப்போய் பார்த்தா ஷாக்!என்னாச்சு
திருப்பூர்: பல்லடம் அருகே காதலனால் தீ வைக்கப்பட்ட காதலி உடல் முழுக்க தீயோடு ஆடையின்றி ரோட்டில் நின்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் அருகே இருக்கும் பனைப்பாளையம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று பிற்பகல் நேரத்தில் திடீரென அங்கு இருக்கும் காட்டு பகுதி ஒன்றில் ஓ என்ற சத்தம் கேட்டு உள்ளது.
இதையடுத்து அந்த வழியாக சென்ற மக்கள் பலர் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி காட்டி எதோ சத்தம் கேட்கிறதே என்று பார்த்துள்ளனர்.

சத்தம்
அப்போது காட்டுக்குள் இருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் இன்னும் தீவிரமாக கேட்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மக்கள் அங்கு அதிகமாக கூடி உள்ளனர். அப்போது பெண் ஒருவர் உடலில் ஆடை இன்றி ஓடி வந்துள்ளார். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்திகொண்டே இவர் சாலைக்கு வந்து சாலையில் விழுந்துள்ளார். இவர் உடல் முழுக்க தீ காயங்களாக இருந்துள்ளது.

ஆடையில்லை
இதையடுத்து அங்கு இருந்த மக்கள் சிலர் அவருக்கு துணி கொடுத்து போற்றிக்கொள்ள சொல்லி உள்ளனர். உடல் முழுக்க தீ காயத்தோடு, மொட்டை வெயிலில் அவர் சாலையில் படுத்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் உடனே சம்பவ இடத்திற்கு வந்தது. கடும் காயங்களுடன் இருந்த அந்த இளம் பெண் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார் . அதே சமயம் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அங்கு இருந்த மக்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

என்ன நடந்தது?
அதன்பின் உள்ளே காட்டு பகுதிக்கும் சென்று என்ன நடந்தது என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின் மருத்துவமனைக்கும் சென்று போலீசார் விசாரணை செய்தனர். அந்த பெண் ராய பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா என்பது தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நிர்வாணம்
இந்த நிலையில் லோகேஷ் - பூஜா இருவரும் தனியாக காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கே நெருக்கமாக இருவரும் இருந்துள்ளனர். எல்லாம் முடிந்த பின் ஆடையின்றி லோகேஷுக்கு அருகில் படுத்து இருந்த பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷிடம் தெரிவித்துள்ளார். ஆனால் லோகேஷ் இதற்கு பதில் சொல்லாமல் மழுப்பலாக பேசி இருக்கிறார். மீண்டும் மீண்டும் பூஜா திருமணம் பற்றி கேட்டு இருக்கிறார். ஆனால் லோகேஷ் அதற்கு பதில் சொல்லாமல் இருக்கவே இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாக்குவாதம் சண்டையில் முடியவே பூஜாவை லோகேஷ் தாக்க தொடங்கி உள்ளார்.

பூஜா
பூஜா ஆடையின்றி இருந்த போதும் அவரை சரமாரியாக கற்களால் தாக்கி உள்ளார். காயத்தில் துடித்துக்கொண்டு இருந்த பூஜா மீது தனது பைக்கில் இருந்த பெற்றோல் பாட்டிலில் இருந்து பெட்ரோலை எடுத்து ஊற்றி உள்ளார். அதோடு பூஜாவிற்கு அங்கேயே தீ வைத்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் லோகேஷ். உடல் முழுக்க தீயோடு துடித்துக்கொண்டு இருந்த பூஜா, காயங்களோடு அங்கிருந்து ஓடி சாலைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜா 90 சதவிகித காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். லோகேஷை கைது செய்த பல்லடம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications