திருப்பூரில் கொட்டிய ஆதார் அட்டைகள்.. மீண்டும் 31 பேரா? நிலைமை பெரிசாகுதே.. பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் போலி ஆதார் அட்டைகள் புழக்கம் அதிகரித்தபடியே உள்ளது.. கடந்த மார்ச் மாதம் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்கியிருந்த வங்காளதேச இளைஞர்கள் 31 பேர் கைதாகி இருந்தனர்.. இந்நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது..
3 மாதங்களுக்கு முன்பு, கேரளாவின் பெரும்பாவூர் பகுதியில் உள்ள கடையில் போலி ஆதார் அட்டை அச்சடித்து வழங்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் மாறுவேடத்தில் சோதனை நடத்தினர்.

பெரும்பாவூர் பஸ் ஸ்டாண்டு
அப்போது, பெரும்பாவூர் பஸ் ஸ்டாண்டு பகுதியிலுள்ள ஒரு செல்போன் கடையில், போலி ஆதார் கார்டுகள் அச்சடிப்பது தெரியவந்தது.. பிறகு அந்த கடைக்கு சீல் வைத்த போலீசார், ஏராளமான போலி அட்டைகளை பறிமுதல் செய்திருந்தனர்..
பிறகு அடுத்த சில நாளிலேயே கேரளா செல்லும் ரயிலில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போலி ஆதார் அட்டைகளுடன் இறங்கினார்கள்.. அதில், அந்த சிறுமிகளுக்கு 18 வயது பூர்த்தியானது என்று பதிவாகியிருந்தது.
பத்திரமாக ஒப்படைப்பு
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், விசாரணை மேறகொண்டபோது, 5 சிறுமிகளுக்குமே 16 வயது ஜார்க்கண்ட்டிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்துள்ளதும் தெரியவந்தது. 50 ரூபாய் தந்தாலே, போலி ஆதார் அட்டை கிடைத்துவிடுமாம்.. பிறகு சிறுமிகளை அவர்களது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இதுபோல கடந்த 6 மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர்கள் கைதாகி உள்ளனர்.. இதற்காகவே, கியூ பிரிவு மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்புத் தனிப்படை போலீஸார், மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்..
பல்லடம் பரபரப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பல்லடம் டிகேடிமில் பகுதியில் அதிரடி சோதனை நடத்தியபோது, போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக 26 பேர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான், டிகேடிமில் பகுதியில் போலி ஆதார் பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது.. இப்போது போலீசார் அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்..
அடுத்தக்கட்ட சோதனை
போலி ஆதார் அட்டைகளை வழங்கும் முகவர்கள் யார் என்பது குறித்து காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, மேலும், சில வங்க தேசத்தவர்கள் போலி ஆதார் கார்டுகளை பயன்படுத்தி திருப்பூரில் தங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறதாம்.. எனவே, அதுதொடர்பாக தீவிர சோதனையையும் போலீசார் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications