குழந்தை திருமணங்களில் கலந்து கொள்பவர்களும் குற்றவாளி.. என்ன தண்டனை.. திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
திருப்பூர்: பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமண தடை சட்டத்தின்படி, குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள், குழந்தை திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார். குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமண தடை சட்டத்தின்படி, குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள், குழந்தை திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி ஆவார்கள். இந்த குற்றம் புரிந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அல்லது 2 வருட கடுங்காவல் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவர்களிடம் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதார் கார்டு மூலம் பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுரை வழங்க வேண்டும். குழந்தை திருமணங்கள் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும்.
புகார் தெரிவிக்க திருப்பூர் கலெக்டர், மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.35, கலெக்டர் அலுவலகம், திருப்பூர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அறை எண்.705 ஆகியவற்றையும், சைல்டுலைன் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பெண்கள் உதவி மையம் 181 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
இதுதவிர ஊராட்சி தலைவர், சமூக நல விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தலைமையாசிரியர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம்" இவ்வாறு திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications