திருப்பூரில் சொத்து வரி சபாஷ்.. உயர்த்தப்பட்ட சொத்தின் வரியை குறைக்க தமிழக அரசுக்கு போன லட்டர்.. செம
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கையையடுத்து, சொத்து வரியை குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது, தமிழக அரசுக்கு அனுப்பி பரிந்துரைக்கப்படும் என்று மேயர் மேயர் தினேஷ்குமார் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
தமிழக மாநகராட்சிகளுக்கு பிரதான வருவாய் சொத்து வரிகள்தான்.. இந்த வருவாய் மூலம்தான், மக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊக்கப்பரிசுகள் - விளம்பரங்கள்
எனவே, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது... அந்தவகையில், அரையாண்டு ஆரம்பிக்கும் முதல் 30 நாளில் சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் தரப்பட்டு வருகிறது..

மேலும், முறையாக வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேசமயம், வரியை கட்டாமல் போனால், உரிமையாளர்கள் கூடுதலாக 1 சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரியை செலுத்த வேண்டிவரும்..
நாமக்கல் - அசரடித்த ராசிபுரம்
இந்த வரியை வசூலிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வியூகம் மேற்கொள்ளப்படும்.. உதாரணத்துக்கு நாமக்கல் மாவட்டத்திலும், சொத்து வரியை வசூலிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
அதிலும் ராசிபுரம் நகராட்சியில், வரியை வசூலிக்க மேற்கொள்ளும் முயற்சிகள், பொதுமக்களை ஈர்த்துவிடும். ஆட்டோ மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்வது, மாநகராட்சி ஊழியர்களே, நேரடியாக கடைகளுக்கு சென்று சொத்து வரியை நினைவூட்டுவது, ராசிபுரம் நகராட்சி சார்பாக பேனர்கள் வைப்பது, ஆன்லைனில் வரி செலுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கம் போன்ற விளம்பரங்கள் மக்களின் கவனத்தை குவித்திரந்தன.
திருப்பூர் மாநகராட்சி
ஆனால், திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு பெரும் பிரச்னையாக வெடித்துவிட்டது.. மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இந்த வரி உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கடையடைப்பு உட்பட பல்வேறு போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
இதனால், சொத்து வரியை குறைக்க தீர்மானம் நிறைவேற்ற, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு அழுத்தம் தரப்பட்டதையடுத்து, அவசர கூட்டம் கூட்டப்பட்டது. அதில், "பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரியை குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது, தமிழக அரசுக்கு அனுப்பி, பரிந்துரைக்கப்படும்" என்று மேயர் தினேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார்.
கடிதம் அனுப்பப்பட்டது
அதன்படியே, சொத்து வரி குறைப்பு தீர்மானம் மற்றும் விளக்க கடிதம், நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.. அந்த கடிதத்தில், "மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், வரி விதிப்பு தொடர்பான தகவல்கள், நான்கு மண்டலங்களில் உயர்த்தப்பட்ட சொத்து வரி விலை பட்டியல் இடம் பெற்றுள்ளன. சொத்து வரி அதிகம் என்பதால், பல தரப்பினரும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இயக்குநர் வாயிலாக இந்த கடிதம் துறை செயலருக்கும், அரசின் தலைமை செயலருக்கும் பரிந்துரை செய்யப்பட்டு, அனுமதி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications