பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்த பதில்.. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நெகிழ்ச்சி
திருப்பூர்: அமெரிக்காவின் 50 சவீத வரியால் திருப்பூரில் பாதிப்பு அதிகமாக உள்ளது.எனவே திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் எதிர்கொண்டு வரும் நெருக்கடி காலத்தில் நிலையான வர்த்தகத்தை எட்ட தேவைப்படும் மத்திய அரசின் உதவிகள் குறித்து கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படடது. அதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பரிசீலிப்பதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் பல லட்சம் கோடிக்கு மேல் நடக்கிறது. ஐடி, ஜவுளி, என்ஜினிரியரிங், மருந்து, கடல் உணவுகள், தோல் பொருட்கள் என பல்வேறு வகையில் ஏற்றுமதி நடக்கிறது இதற்கு பெரிய அளவில் வரிகள் இந்தியாவிற்கு கிடையாது ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின்னர், வர்த்தக பற்றாக்குறை உள்ள இந்தியா உள்பட பல்வேறு உலகநாடுகளிடம் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதித்து வருகிறார்.

இந்தியாவுக்கு 25 சதவீதமும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்து டிரம்ப் கடந்த உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இது நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா தான் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்து வருகிறது. இந்த வரி ஏற்றம் காரணமாக இந்திய பொருட்கள் ஏற்றுமதி அடியோடு குறைந்திருக்கிறது. இதில் அதிகப்படியான பாதிப்பை திருப்பூர் தான் சந்தித்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் எதிர்கொண்டு வரும் நெருக்கடி காலத்தில் நிலையான வர்த்தகத்தை எட்ட தேவைப்படும் மத்திய அரசின் உதவிகள் குறித்து கோரிக்கை மனுவை கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமரிடம் அனுப்பிய மனுவிற்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனு பெறப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மத்திய அரசு 'சேப்' என்ற திட்டத்தின் வாயிலாக நிறுவனங்கள் தொழிலாளர் தங்குவதற்கு விடுதி கட்டமைப்பை ஏற்படுத்த 30 சதவீத மானியம் அறிவித்திருந்ததை 50 சதவீதம் என்ற அளவில் உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும். விரைவில் அது குறித்து அறிவிப்பு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான வட்டி மானியமாக நிறுவனங்கள் பெற்றுள்ள கடனுக்கான வட்டியில் 5 சதவீத அளவு மத்தி அரசு கடந்த டிசம்பர் மாதம் வரை வழங்கியிருந்த நிலையில், தற்போது தொடரவில்லை. இந்த திட்டம் இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கைக்கு சமீபத்திய நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அமெரிக்க ஏற்றுமதி வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏற்றுமதிக்கென்ற அதன் மதிப்பில் 15 சதவீத ஊக்க தொகையை வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில் ஊக்கத்தொகை வழங்குவது உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரானது. இருப்பினும் தற்சார்புடைய துறையின் வாயிலாக கருத்துரு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துக்கள் பெறப்பட்ட பின் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications