Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் கலெக்டர் ஆபீசுக்கு உள்ளாடை சுற்றி வந்த நபர்.. அரசு மருத்துவமனை ஊழியரின் ஆச்சரிய செய்கை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழக்கம்போல மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் டூ வீலரில் வந்த அந்த ஒரு நபர், தனது வினோதமான ஆடை அலங்காரத்தால் அங்கிருந்த அனைவரையும் ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்.. அந்த நபரின் செய்தியும், அவரது போட்டோ, வீடியோக்களும்தான் இணையத்தில் வைரலாகிகொண்டிருக்கிறது.. என்ன நடந்தது திருப்பூரில்?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க வருவது வழக்கம்..

Tiruppur Government Office Employee

திருப்பூர் அரசு மருத்துவமனை ஊழியர்

அப்படித்தான் நேற்றைய தினமும் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எனப் பலரும் திரண்டிருந்தனர்.. அப்போது பைக்கில் ஒரு இளைஞர் உள்ளே நுழைந்தார்..

அவர் அணிந்திருந்த ஆடை அங்கிருந்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.. அந்த இளைஞர் மேல் சட்டை ஏதும் அணியாமல், தனது உள்ளாடை வெளியே தெரியும்படி வேட்டியை மட்டும் வினோதமான முறையில் ஆடையாக உடுத்தி வந்திருந்தார்..

கலெக்டர் ஆபீஸ்

இதனை கண்டதும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் வருவதால், இது போன்ற முறையற்ற ஆடையுடன் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீசார் கண்டிப்புடன் தெரிவித்தனர்.. மேலும், முறையான ஆடை அணிந்து வருமாறும் அறிவுறுத்தினர்..

ஆனால், அந்த இளைஞர் போலீசாரின் தடையை ஏற்க மறுத்து அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படுத்திய அவர், தனது கோரிக்கை குறித்து ஏற்கனவே பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டார்.. தனது புகாரை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளிக்க வந்திருப்பதாகவும், தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் பிடிவாதமாகப் பேசினார்..

உள்ளாடை வேட்டி

இந்த திடீர் மோதலால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.. இறுதியில் அந்த இளைஞர் மனு அளிக்க உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்..

உள்ளே சென்ற அவர், தனது கோரிக்கையை மனுவாக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.. பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, பல்வேறு தகவல்களை கூறி அதிர வைத்தார்,,

அந்த இளைஞர் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த கிரிநாதன் என்பது தெரியவந்தது.. அவர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் கிரிஸ்டல் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருபவராம்..

திருப்பூரில் இளைஞர் ஆச்சரியம்

கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் தன்னை எவ்வித முன்னறிவிப்புமின்றி அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டார்களாம்.. அவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கித் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், தான் விடுப்பு எடுத்த காரணத்தைக் கூறி வேலையை விட்டு நீக்கியதாக அந்த நிறுவனம் அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் கிரிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்..

அதுமட்டுமல்ல, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாறுபட்ட ஆடை அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்து மனு கொடுக்க வந்தததாகவும், தன் நிறுவனத்தில் பணியாற்றியதற்கு சேர வேண்டிய ஊதியத்தை வழங்காமல் விடுப்பு எடுத்த காரணத்திற்காக நீக்கியது எந்த வகையில் நியாயம்? என்றும் கிரிநாதன் கேள்வி எழுப்புகிறார்..

சம்பளம் எங்கே?

மேற்கண்ட விஷயங்களையும் தன்னுடைய மனுவில் விரிவாக எழுதி தந்துள்ளார்.. விரைவில் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஊழியரின் வாழ்வாதார போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த வினோதமான போராட்டத்தால் திருப்பூரில் இன்று பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+