டிரம்பின் வரி எமர்ஜென்ஸி.. திண்டாடும் திருப்பூர்.. முடங்கிய பின்னலாடை உற்பத்தி
திருப்பூர்: இந்தியா மீதான வரியை 50 சதவீதம் உயர்த்தி அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் நல் உறவை கடைபிடித்து வந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் இந்தியா மீது கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.
இதற்காக இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரியை 25 சதவீதம் உயர்த்தியிருந்தார் டிரம்ப். அந்த அதிர்ச்சியில் இருந்து மத்திய அரசும், தொழில் நிறுவனங்களும் வெளி வருவதற்குள் இந்தியா மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரி 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி பாதிப்பு
இது தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு, அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்ததுடன் உயர்த்திய வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும் டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதன் பாதிப்பை தொழில் நிறுவனங்கள் இப்போதிருந்த உணர தொடங்கிவிட்டனர். பின்னலாடை உற்பத்திக்கு பெயர் பெற்ற திருப்பூரை டாலர் சிட்டி என்றழைப்பார்கள். பின்னலாடையில் பெரும்பாலான உலக நாடுகளின் விருப்பப் பட்டியலில் திருப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு சவால்கள் எழுந்து வருகின்றன.
முடங்கிய உற்பத்தி
2008 பொருளாதார மந்த நிலையில், ஜிஎஸ்டி வரி, மின் கட்டண உயர்வு, கொரோனா தொற்று ஆகியவற்றால் சரிவில் இருந்த பின்னலாடை உற்பத்தி கடந்த சில மாதங்களாக தான் சூடுபிடிக்க தொடங்கியது. அதற்குள் டிரம்பின் அறிவிப்பு திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. உற்பத்தி செய்த துணிகளை அனுப்ப முடியாமல், அதை அப்படியே நிலுவையில் வைத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உற்பத்தி செய்த துணிகளை குறைந்த விலைக்கு விற்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், "இங்குள்ள பல குறு சிறு நிறுவனங்கள் கூட அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்கிறோம். திடீர் வரி உயர்வு காரணமாக எங்களின் செப்டம்பர் மாத திட்டத்தை அப்படியே காத்திருப்பில் வைத்து விட்டோம்.
முந்தும் வியட்நாம், வங்கதேசம்
அமெரிக்காவில் எங்களின் உற்பத்தியை கொள்முதல் செய்பவர்களுக்கு கூட பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியவில்லை. இதனால் அவர்கள் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தொடங்கிவிட்டனர். எங்களுக்கான மார்ஜினே மிகவும் குறைவு. அதிலும் அவர்கள் விலையை குறைக்க சொல்கிறார்கள். 50 சதவீதம் வரி உயர்வு இருக்கும்போது விலையை குறைப்பதற்கான சாத்தியமே இல்லை.
ஒவ்வொரு நிறுவனமும் சராசரியாக ரூ.5 கோடி மதிப்பிலான பின்னலாடைகளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளனர். ஆனால் அங்குள்ள எங்களின் வாடிக்கையாளர்கள் நாங்கள் மீண்டும் சொல்லும் வரை அனுப்ப வேண்டாம் என கூறிவிட்டனர். வரி உயர்வால் வியட்நாம், வங்கதேசம் நாடுகளுடன் உற்பத்தியுடன் நம்மால் போட்டி போடவே முடியாது.
அடிமட்ட விலைக்கு கேட்கும் நிலை
இந்தியாவுக்கு தேவையான 90 சதவீதம் பருத்தி பின்னலாடையையும், நாட்டில் ஏற்றுமதி செய்யும் பின்னலாடையில் 55 சதவீதமும் திருப்பூரில் தான் உற்பத்தியாகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.39,618 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.33,045 கோடி மதிப்பிலான பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டது. எங்களுக்கான ஆர்டர்கள் ஏற்கனவே வந்துவிட்டதால் உற்பத்தியை பாதியில் நிறுத்த முடியாது.
அதேநேரத்தில் குறைந்த விலைக்கும் விற்க முடியாது. எங்களின் மார்ஜினே 5-7 சதவீதம் தான். அப்படி இருக்கும்போது 50 சதவீத வரி உயர்வை எப்படி ஏற்க முடியும். இதனால் நீண்ட காலமாக தொழில் இருப்போர் கூட கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரி உயர்வை உடனடியாக ரத்து செய்தாலும் கூட இதில் இருந்து மீண்டு வர தாமதம் ஆகும்." என்கின்றனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications