திருப்பூர் பல்லடத்தில் எங்கேயோ சென்ற கண்டெய்னர் லாரி.. ஸ்கூட்டரில் தாய் மகள்.. இப்படியுமா நடக்கும்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரத்தின் நால்ரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி கோவையிலிருந்து வந்து கொண்டிருந்தது. பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, திடீரென அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த தாய்,மகள் இருவருமே இப்போது உயிருடன் இல்லை.
கோவையிலிருந்து பல்லடம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி வந்த போது, பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பல்லடத்தைச் சேர்ந்த தாய் மகாராணி (54), மகள் கிருத்திகா (30) இருவர் மீது கன்டெய்னர் விழுந்துவிட்டது.

அதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த பல்லடம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இரண்டு பெண்களின் உடல்களை கிரேன் கொண்டு மீட்டனர். . இந்த, விபத்தால் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸார், தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி தலைமை ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுவில் மோட்டார் சைக்கிள் மீது பள்ளிக்கூட வேன் மோதியதில் தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்த 56 வயதாகும் ஐசக் தவராஜ் என்பவர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள கே.கைலாசபுரம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜான்சி தூத்துக்குடியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். மகள் திண்டுக்கல்லில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.
நேற்று காலையில் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு வழியாக ஐசக் தவராஜ் தனது பைக்கில் கே.கைலாசபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். வில்லிசேரி அருகே சென்றார். அப்போது எதிரே தனியார் பள்ளிக்கூட வேன் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக திடீரென்று மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதின.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐசக் தவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட வேன் டிரைவரான மாரியப்பனை கைது செய்தனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications