இலவச 3 ஆயிரம் ரொக்கத்தை சுளையா அள்ளிய திருப்பூர் மக்கள்.. அப்ப பொங்கல் பரிசு யாருக்கும் வேண்டாமா?
திருப்பூர்: தமிழகத்தில் இதுவரை 1.86 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். எனினும் 2 விதமான சிக்கல்கள் முளைத்துள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.. என்ன நடக்கிறது திருப்பூரில்?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பரிசு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதுடன், ரேஷன் கடைகள் மூலம் வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் கடந்த 8ம் தேதி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்து பயனாளிகளுக்கும் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ரேஷன் கடைகள் - தமிழக அரசு மாஸ்
குறிப்பாக, கூட்டுறவுத் துறையின் துல்லியமான திட்டமிடல் மற்றும் செயல்பாடு காரணமாக, தேசிய வங்கிகள் செய்ய முடியாத பணியையும் கூட்டுறவு வங்கிகள் திறம்பட நிறைவேற்றி, ரொக்கப் பரிசை நேரத்தில் விநியோகித்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) வரை, மாநிலம் முழுவதும் உள்ள 24,924 நியாயவிலைக் கடைகள் மூலம் 1,86,23,426 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 வீதம் மொத்தம் ரூ.5,587.02 கோடி ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் 1,39,06,292 வேட்டி - சேலைகளும் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களுக்கு ரொக்கம் மீது லவ்
இந்நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டம் இந்த ஆண்டு பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை விட, ரொக்கத் தொகைக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் தருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது பல இடங்களில் மக்கள் பரிசுப் பொருட்களை வாங்காமல், பணத்தை மட்டும் பெற்றுச் செல்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருப்பூரின் நகர்ப்புற மற்றும் தொழில் பகுதிகளில் இந்த போக்கு அதிகமாக காணப்படுகிறதாம்..
தினசரி செலவுகள், கடன், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக ரொக்கம் பயன்படும் என்பதே இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் சிலர், பரிசுப் பொருட்கள் தரமற்றவை, அவசியமற்றவை என்றும் ரேஷன் கடைகளில் பணத்தை மட்டும் வழங்கினால் போதும் என்றும் சொல்கிறார்களாம்..
இதனால் அரசின் பெரும் செலவில் வழங்கப்படும் பொருட்கள் முழுமையாக மக்களிடம் சென்று சேருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டுகளிலும் இதுபோன்ற கருத்துகள் எழுந்தாலும், இந்த முறை அது ஓபனாகவே தெரிய வந்துள்ளதாக தெரிகிறது..
பரிசு சேலை ஷார்ட்டேஜ்?
அதேபோல சில ரேஷன் கடைகளில் பெரும்பாலான இடங்களில் பொருட்கள் கிடைக்காததால், அங்கு வரும் ரேஷன்தாரர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்களாம்..
பெருமளவு சேலைகள் ரேஷன் கடைகளுக்கு வராததால் பெரும்பாலான கடைகளில் அவற்றை மட்டும் வழங்க முடியவில்லை என்றும், ரேஷன் ஊழியர்களிடம் சேலை எப்போது வரும் என்று கேட்ட பெண்களுக்கு பதில் கிடைக்காததால், அதிருப்தியில் வீடு திரும்புவதாகவும் ஆங்காங்கே கூறப்படுகிறது.
ஆயிரம் சலசலப்புகள் ஆங்காங்கே இருந்தாலும், தமிழகத்தில் இதுவரை 1.86 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது, முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications