Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் வாடகை வீட்டில் இவரா? பல்லடத்தில் யாருக்குமே தெரியாம போச்சு.. பேங்க் தவணை பணம் என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.. குறிப்பாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள், அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் தெரிகிறது. அந்தவகையில், முறைகேடாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை, திருப்பூர் என இந்த கைது நடவடிக்கைகள் அதிகமாகி கொண்டே செல்கிறது.,

சமீபத்தில், சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில், 33 பேர் சட்ட விரோதமாக பதுங்கியிருந்துள்ளனர்.. இவர்கள் அனைவருமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இறுதியில், இவர்களை போலீசார் கைது செய்ததுடன், 33 பேரில், 25 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 8 குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tiruppur Rental House Palladam

சட்டவிரோதம் குடியேற்றம்

அதேபோல, நேற்றைய தினமும் பூந்தமல்லி அருகே அகரமேல் கிராமத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தவிர, 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றார்கள்.. எனவே, போலீசார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பல்லடம் வாடகை வீடு

இந்த பரபரப்பு முடிவதற்குள்ளேயே, திருப்பூரில் மற்றொரு பரபரப்பு நடந்துள்ளது. பல்லடம் அருகே வசித்து வந்த தம்பதியின் சயன் - கீதா.. இதில் சயனுக்கு 40 வயதாகிறது, கீதாவுக்கு 36 வயதாகிறது.. இந்த தம்பதி நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சம் கடன்பெற்று, வீடுகள் கட்டி, அதனை வாடகைக்கு விட்டிருந்தனர். கடந்த 2 வருடங்களாக முறையாக தவணை தொகையை செலுத்தி வந்த நிலையில், சயனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவமனையில் சயன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த காரணத்தினால் தவணை தொகையை அவரால் முறையாக அடைக்க முடியவில்லை... அப்படியிருந்தும் ஒரு வாரத்திற்கு முன்பு 4 மாத கடன் தொகையை செலுத்தியும், அந்த தொகை செயலாக்க கட்டணத்திற்கு சரியாவிட்டதாக சொல்லிவிட்டார்கள்..

வீட்டுக்கு சீல் நோட்டீஸ்

இதனால் கடன் தொகையை உடனே செலுத்த வேண்டும் என்றுகூறி, அவரது வீட்டிற்கு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சென்றனர்.. அப்போது வீடுகளை ஜப்தி செய்வதாகக் கூறி 6 வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி சென்றுவிட்டார்கள்.. இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த கீதா, எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். எனினம், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனிடையே, சீல் வைக்கப்பட்ட வீடுகளில் வாடகைக்கு குடியிருந்தவர்கள், இதுகுறித்து பல்லடம் போலீஸில் புகார் தந்தனர்.. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்...

பரபர வாக்குமூலம்

அப்போதுதான், சீல் வைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர் சயன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 20 வருடங்களாகவே சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரிய வந்தது.. இதுகுறித்து சிகிச்சை பெற்று வரும் சயனிடம் போலீசார் இதுகுறித்து கேட்டார்கள்..

அப்போது சயன், "வங்க தேசத்திலிருந்து வந்து, திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டேன். மனைவியின் ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகளை பெற்றுள்ளேன்..

அதேபோல, குடியுரிமை பெறுவதற்கு ரூ.15 லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். இதுவரை குடியுரிமை கிடைக்கவில்லை" என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் போலீசார் சயனை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+