பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் ஆர்வம் காட்டும் திருப்பூர்.. 2500 செலுத்தினால் 8.79 லட்சம் கிடைக்கும்
திருப்பூர்: திருப்பூர் தபால் நிலையங்களில் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 4 ஆயிரத்து 295 பேர் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். பலர் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். உங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்திருந்தால் அல்லது ஆண் குழந்தை இருந்தால் தாராளமாக சேமிக்கலாம். குழந்தை வளர்ந்து உயர்கல்வி பயிலும் போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் கையில் பணம் இருக்கும்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தை பொறுத்தவரை ஆண் குழந்தைகளுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை இந்திய அஞ்சல் துறை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பெண்குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் போலவே, ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் இருக்கிறது. செல்வ மகள் சேமிப்பு திட்டம் போல் இந்த திட்டம் கிடையாது. ஏனெனில் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை ஆண்டுக்கு சேமிக்க முடியும். பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் தொடர்ந்து ஆண் குழந்தைகள் பெயரில் கணக்கை தொடங்கி 15 ஆண்டுகள் பணத்தை செலுத்தலாம். இந்த திட்டத்தில் சேமிக்கும் பணத்திற்கு 8.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும்.
தற்போது இந்த திட்டத்தில் ஏராளமானோா் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கி சேமித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் இந்த நிதியாண்டில் 4 ஆயிரத்து 295 பேர் கணக்கு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் முக்கிய விவரம்:
* 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது guardian கணக்கைத் திறக்க முடியும்.
* குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம்.
* பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 8.1% ஆகும்.
* திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டுகளை தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம்.
* சம்பாதித்த வட்டி உட்பட முழுத் தொகையும் மேஜர் ஆனவுடன் ஆண் குழந்தைக்கு கிடைக்கும்.
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம், தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு நல்ல வழி. அதிக வட்டி விகிதம் மற்றும் நீண்ட முதிர்வு காலம் திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக மாற்றும்
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்ட கணக்கை எவ்வாறு திறப்பது :
1. தமிழ்நாட்டில் எந்த ஒரு ஒரு தபால் நிலையத்தை அணுகலாம்.
2. திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
3. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று போன்ற தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
4. ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500
5. கணக்கு திறக்கப்பட்டு குழந்தைக்கு பாஸ்புக் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் மாதம் 2500 ரூபாய் வீதம்,வருடத்திற்கு 30000 ரூபாய் முதலீடு செய்தால், வட்டி விகிதம் 8.1%.
அதனடிப்படையில் 15 ஆண்டுகள் இத்திட்டத்தில் 4,50,000 ரூபாய் முதலீடு செய்தால் 4,28,693 ரூபாய் முதலீடு வட்டியாக கிடைக்கும். மொத்தத்தில் முதிர்வு தொகை 8,78,693 ரூபாய் கிடைக்கும். அதேநேரம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் 18,00,000 மொத்தம் முதலீடு வந்திருக்கும். 15 ஆண்டு முடிவில் 35,14,771 ரூபாய் உங்கள் கைக்கு கிடைக்கும். வட்டியாக மட்டும் ₹17,14,771 உங்களுக்கு கிடைக்கும். இந்த பணம் மாறுதலுக்கு உட்பட்டது. அரசு வட்டி விகிதத்தை குறைத்தாலோ அல்லது கூட்டினாலோ பணம் கிடைக்கும் தொகையில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications