திருப்பூர் ரிதன்யாவுடன் முடியலயே.. கணவன் சொன்ன ஒரு வார்த்தை.. 2வது மாடிக்கு ஓடின இளம் மனைவி.. கடவுளே
திருப்பூர்: திருப்பூர் ரிதன்யா விவகாரத்தின் அதிர்ச்சி முடிவதற்குள், ஷார்ஜாவில் 2 இளம்பெண்கள் இதே வரதட்சணை கொடுமைக்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. ரிதன்யாவே கடைசி மரணமாக இருக்கட்டும் என்று நினைத்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைகளின் துயரங்கள் நீண்டு கொண்டே வருகிறது.. இப்போது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கதியை பாருங்க.. இது சம்பந்தமான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
வரதட்சணை பெறுவதும், கொடுப்பதும் மாபெரும் குற்றம் என்று பலமுறை அறிவுறுத்தியும்கூட, அதே தவறை பலரும் செய்து வருகிறார்கள். இதனால், வன்முறை துவங்கி மனித இழப்பு வரை நடந்து விடுகிறது.

வரதட்சணை கொடுமை
தமிழகம், தென்மாநிலம் மட்டுமல்லாமல், வடமாநிலங்களிலும் இந்த வரதட்சணை கொடுமை விதிவிலக்கல்ல.. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகள் வரதட்சணை தரவில்லை என்பதற்காக, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஊசியை செலுத்தியிருக்கிறார் மாமியார்..
இதனால் உடம்பில் தொற்று பரவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அந்த மருமகள்..
இதேபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் நடந்துள்ளது.. அலிகார் மாவட்டத்தின் டான்கோலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா.. இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்..
தம்பதிக்குள் தகராறு
ஆரம்பத்தில் இனிமையாக வாழ்க்கை கழிந்துவந்த நிலையில், நாளடைவில் தம்பதிக்குள் வரதட்சணை பிரச்சனை வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் மாமியார், கணவர் இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை துன்புறுத்த துவங்கியிருக்கிறார்கள்.. மாமியார் நேஹ்னி தேவி, மாமனார் பிரேம்பால், கணவர் சோனு, மைத்துனர்கள் பிரமோத், துர்கேஷ் ஆகியோர் சேர்ந்து 5 லட்சம் ரூபாய்க்கு மோட்டார் பைக், பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்..
இந்த ரூ.5 லட்சத்தை மையமாக வைத்தே தினம் தினம் அர்ச்சனாவுக்கு டார்ச்சர் தந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் எல்லைமீறி சென்ற மாமியார், வீட்டின் 2ம் மாடியில் இருந்து, அர்ச்சனாவை கீழே குதிக்கும்படி மிரட்டியிருக்கிறார்..
2வது மாடியில்
உடனே கணவரும் "குதி" என்று இரக்கமேயில்லாமல் சொல்லியுள்ளார்.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த அர்ச்சனா 2வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.. இதை மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாருமே தடுக்காமல் திட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்களாம்..
தரையில் கீழே விழுந்த அர்ச்சனா, வலியால் அலறி துடித்துள்ளார் அர்ச்சனா.. அப்போதுகூட மனமிரங்காத கணவர், அர்ச்சனாவை இரக்கமின்றி தாக்கியிருக்கிறார்.. இந்த கொடூர சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அதுதான் பரவலாகப் பரவி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. அந்த வீடியோவில் அர்ச்சனாவின் குழந்தைகள் கதறி அழும் சத்தமும் பதிவாகியுள்ளது.
உடம்பெல்லாம் காயங்கள்
இதனிடையே, அர்ச்சனாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய சகோதரியை பாரட்சமாக, அவரது மாமியார் வீட்டில் நடத்துவதாக கூறி அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த புகாரும், வீடியோவும் இணையத்தில் வைரலானதையடுத்து போலீசார் விரைந்து விசாரணை தொடங்கியுள்ளனர்... உடம்பெல்லாம் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வரும் அர்ச்சனாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால், இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன், வரதட்சணைக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்தபடி உள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications