ரிதன்யா வழக்கில் திருப்பூர் முதன்மை நீதிமன்றம் அதிரடி .. கணவர், மாமியாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான கணவர் கவின்குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்தவர் ரிதன்யா. 27 வயதான ரிதன்யா கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று அன்று கவின் குமார் என்பவரை மணந்தார். திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி
இருந்த போதிலும், கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த ரிதன்யா, ஜூன் 28 அன்று மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இறப்பதற்கு முன், ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா பதிவு செய்திருந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ரிதன்யா தற்கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 ஆம் தேதி மாமியார் சித்ரா தேவியையும் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதுவரை நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழில் அதிபரான இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த 2½ மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.
இருந்த போதிலும், கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதாவது, திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்ணின் வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டுள்ளனர். ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2½ கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மாமனார், மாமியார் தான் காரணம்
ஆனால், மாமனாரும், மாமியாரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி சித்ரவதை செய்தாதாக கூறப்படுகிறது. மேலும் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் மனரீதியாக ரிதன்யாவை துன்புறுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனம் வெதுமி போன ரிதன்யா விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இறப்பதற்கு முன், ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா பதிவு செய்திருந்தார். தனது தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப்பில் "மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் என்னுடைய மரணத்திற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக அனுப்பி இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
நீதிபதி அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ரிதன்யா தற்கொலை சம்பவம் ஏற்படுத்தியது. இதற்கிடையே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 ஆம் தேதி மாமியார் சித்ரா தேவியையும் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை மற்றும் அவருடைய தரப்பு வக்கீல் ஆஜராகி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தனர். கவின்குமார் தரப்பு வக்கீல் ஜாமீன் கோரினார்கள். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி குணசேகரன், ரிதன்யா தரப்பின் இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு, கவின்குமார் தரப்பின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications