Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் எஸ்ஐ வெட்டிக் கொலை.. ரோந்து வாகனத்தில் உடன் சென்ற மற்றொரு காவலர் தப்பியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது எஸ்ஐ சண்முகவேலுடன் சென்ற காவலர் அழகுராஜ் வாகனத்திலேயே அமர்ந்திருந்து இருக்கிறார். சண்முகவேலை வெட்டியவர் அழகுராஜையும் துரத்த, அங்கிருந்து காவலர் தப்பியோடி இருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் பணியாற்றி வந்திருக்கின்றனர். இருவரும் நேற்றிரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Tiruppur SI Murder

இவர்களுக்கு இடையில் எழுந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறி இருக்கிறது. இதனால் தந்தை மூர்த்தியை மகன் தங்கபாண்டியன் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீஸ் அவசர உதவி எண்ணான 100க்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதனால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய எஸ்ஐ சண்முகவேலுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் எஸ்ஐ சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜ் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சண்முகவேல் மட்டும் சென்று இருவரையும் சமாதானம் செய்த நிலையில், காயம் அடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், திடீரென கண் இமைக்கும் நேரத்தில் எஸ்ஐ சண்முகவேலை அரிவாளால் வெட்டி இருக்கிறான்.

இந்த சம்பவம் அறிந்து உடனடியாக காவலர் அழகுராஜையும் வெட்ட தங்கபாண்டியன் துரத்தி இருக்கிறார். ஆனால் அங்கிருந்து உடனடியாக தப்பியோடிய அழகுராஜ், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். இதன்பின் காவலர்கள் தோட்டத்திற்கு வருவதற்குள் சண்முகவேல் உயிரிழந்துவிட்டார். பின்னர் தங்கப்பாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+