மொத்தமாக முடங்கிய திருப்பூர்.. இன்று முதல் ஜவுளி உற்பத்தி 50% ஆக குறைப்பு! தொழிலாளர்கள் பாதிப்பு
திருப்பூர்: இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி பஞ்சாயத்து காரணமாக ஏற்கெனவே திருப்பூரில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், இன்று முதல் திருப்பூர் மற்றும் கோயம்பத்தூரில் ஜவுளி உற்பத்தி 50% ஆக குறைக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மற்றும் கோவையில் 10,000க்கும் அதிகமான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் ஆடர்களை பொறுத்து நூல்களை கொள்முதல் செய்யும். பஞ்சு மூலம்தான் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11% வரி இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக இந்த வரிக்கு மத்திய அரசு விலக்கு கொடுத்து வந்தது. இந்த ஓராண்டு காலகட்டம் என்பது கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
எனவே, மீண்டும் வரி விலக்கு கொடுக்கப்படாததால் நூல் விலை எப்போது வேண்டுமானாலும் உயரும் அபாயம் இருந்தது. அச்சமடைந்தது போலவே நூல் விலை திடீரென அதிகரித்திருக்கிறது.
கடந்த 3 வாரமாக நூல் விலை 20% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எனவே ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திணறியுள்ளன. பழைய நூல் விலையை கணக்கில் கொண்டு ஏற்கெனவே பெறப்பட்ட ஆடர்களுக்கு, அதிக விலை நூல் கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இன்று முதல் உற்பத்தியை 50% ஆக சுருக்க ஜவுளி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. அதேபோல நூல் விலையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications