காலில் மெட்டி.. நெற்றியில் பொட்டு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சூட்கேஸ் பெண் கொலையில் மாட்டிய நபர்

சடலமாக சூட்கேஸில் கிடந்த பெண் கொலையில் ஒருவர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அசாம் மாநில பெண் திருப்பூரில் கொலை செய்யப்பட்டதையடுத்து, அது தொடர்பாக ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. 4 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஒருவர் சிக்கி உள்ளார்.

கடந்த வாரம் தாராபுரம் சாலை பொல்லிக்காளி பாளையம் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது.

இதனால் அந்த பகுதி மக்கள் அங்கே சென்று பார்த்தபோது சூட்கேஸ் ஒன்றிலிருந்து துர்நாற்றம் அதிகமாக வருவதாக தெரிந்தது. எனவே போலீசுக்கு தகவல் சொல்லவும் அவர்களும் விரைந்து வந்து சூட்கேசை எடுத்து திறந்து பார்த்தனர்..

சூட்கேஸ்

சூட்கேஸ்

அதில், 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் சடலம் கிடந்தது.. வலது கை, தலையின் பின்புறம் காயங்கள் இருந்தன.. கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. நெற்றியில் பொட்டு இருந்தது.. கையில் வளையல், காதில் கம்மலும் இருந்தது.. இன்னொரு கையில் குயின் என்ற ஆங்கில எழுத்துக்களால் பச்சை குத்தப்பட்டிருந்தது... இதையடுத்து, அந்த பெண் யார்? எதற்காக யார் கொன்றார்கள் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர்.. . சூட்கேஸ் கிடந்த பகுதியின் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன...

தாராபுரம்

தாராபுரம்

அதில் கடந்த 6-ம் தேதி இரவு 10.30 மணிக்கு தாராபுரம் ரோட்டில் பைக்கில் 2 பேர் சந்தேகப்படும் விதமாக சென்றுள்ளனர்.. அவர்கள் கையில் சூட்கேஸ் இருந்துள்ளது.. அவர்கள்தான் கால்வாயில் சூட்கேஸை வீசிவிட்டு மறுபடியும் அதே சாலையில் பைக்கில் செல்வது பதிவாகி இருந்தது. இதனால் அந்த 2 பேர் யார் என்பது குறித்த விசாரணை ஆரம்பமானது.. உயிரிழந்த பெண் பெயர் நேகா, அசாம் மாநிலத்தை சேர்ந்தவராம்.. திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

 ஆண் நண்பர்

ஆண் நண்பர்

திருப்பூர் பின்கோடு கேஎம்சி பகுதியிலேயே ஒரு வீட்டினை கடந்த மாதம் தான் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.. அவருடன் ஆண் நண்பர் அபிஜித் என்பவரும் தங்கியிருக்கிறார்... 2 பேருமே ஒரே கம்பெனியில்தான் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.. கடந்த 6ம் தேதி திடீரென வீட்டை காலி செய்வதாக சொல்லிவிட்டு, பொருட்களை அபிஜித் மற்றும் அவரது நண்பர் ஜெய்லால் என்பவர்கள் எடுத்து சென்றார்களாம்.. அப்போதுதான் சம்பந்தப்பட்ட சூட்கேஸையும் கொண்டு சென்றுள்ளனர்.

தனிப்படை

தனிப்படை

இவர்கள் வெளிமாநிலங்களுக்கு தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் ஜெய்லால் என்பெவர்தான் அபிஜித் கொலையை மறைக்க உதவியவராம்.. பைக்கில் சூட்கேஸ் எடுத்து கொண்டு போனவர்கள் இவர்கள் 2 பேரும்தான் என்பது தெரியவந்தது.. இவர்கள் 2 பேரின் செல்போன் நம்பர்களை போலீசார் டிரேஸ் செய்து கொண்டேயிருந்தனர்..

கைது

கைது

கடைசியாக அவர்கள் கர்நாடக எல்லையில் சிக்னல் காட்டியது.. இதனால், அப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர்.. 2 பேரில் ஒருவரான கெய்லால் என்பவரை கைது செய்துவிட்டனர்.. அவருக்கு 27 வயது ஆகிறது.. ஓசூர் அருகே பாத்தக்கோட்டை என்ற கிராமத்தில் வைத்து தனிப்படை போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.. விசாரணை நடக்கிறது.. முக்கிய குற்றவாளியான அபிஜித்தை தேடும் பணி தொடர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+