திருப்பூரில் மீண்டும் ஒரு சோகம்.. வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மீண்டும் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் தாராபுரம் சாலை, பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தியின் மகள் பிரீத்தி (வயது 25). இவருக்கு, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்வர் (வயது 28) என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் 15 அன்று திருமணம் செய்து வைத்தனர்.

120 சவரன் நகை + இன்னோவா கார் + 25 லட்சம்
இந்தத் திருமணத்தின்போது 120 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் 38 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு சதீஸ்வரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு பிரீத்தியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
பிரீத்திக்கு பூர்வீக சொத்து மூலம் 50 லட்சம் ரூபாய் கிடைக்கவிருந்ததை அறிந்த சதீஸ்வரின் குடும்பத்தினர், அந்தத் தொகையையும் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரீத்தி, கடந்த ஒரு மாதமாக தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வரதட்சணை கொடுமை
ஆனால், சதீஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பணம் குறித்து ப்ரீத்தியிடம் பேசி மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தாங்க முடியாத பிரீத்தி, நேற்று (ஆகஸ்ட் 5) மாலை தனது தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தற்கொலை
இந்தச் சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 10 மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆர்டிஓ விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. பிரீத்தியின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.

உடற்கூராய்வு முடிந்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நேரத்தில், பிரீத்தியின் உறவினர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு, சதீஸ்வர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்கள் போராட்டம்
அதைத் தொடர்ந்து, காவல் ஆணையர் ராஜேந்திரன், ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும், பிரீத்தியின் உறவினர்கள் உடலைப் பெற மறுத்துள்ளனர்.
அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், திருப்பூர் பகுதியில் மீண்டும் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications