திருப்பூர் திமுக மேயருக்கு ரூ.42,571 அபராதம்.. மின் திருட்டு புகாரில் மின்வாரியம் அதிரடி ஆக்ஷன்
திருப்பூர்: திருப்பூர் திமுக மேயர் தினேஷ்குமாருக்கு மின்சார வாரியம் ரூ.42,571 அபராதம் விதித்துள்ளது. மின் திருட்டு புகாரில் இந்த அபராதத்தை மின்சார வாரியம் விதித்துள்ளது. வீடு கட்டுமான பணிக்கு முறைகேடாக மின்சாரத்தை திருடிய புகாரில் இந்த அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தன் மீதான குற்றச்சாட்டை மேயர் தினேஷ்குமார் மறுத்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி மேயராக இருப்பவர் தினேஷ்குமார். இவர் சமீபத்தில் தனது வீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக மின் வாரியம் அனுமதியின்றி முறைகேடாக மின்சாரம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக திமுக மேயருக்கு மின்சார வாரியம் அபராதம் விதித்துள்ளது.

ரூ. 42,571 அபராதம் விதித்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தனக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை திமுக மேயர் தினேஷ்குமார் மறுத்துள்ளார். கடந்த 13.10.2025 ல் தற்காலிக மின் இணைப்பு வாங்கியதற்கு ரசீது உள்ளதாக கூறியுள்ள திருப்பூர் மேயர் தினேஷ்குமார், மின் கணக்கீடு செய்ய வந்தவர்கள் அதனை மாற்றாமல் கூடுதல் கட்டணம் பதிவிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மின் திருட்டு புகாரில் திருப்பூர் திமுக மேயர் தினேஷ்குமாருக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது திருப்பூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவாது:- 'மேயர் வீட்டில் ஏற்கனவே பழைய மின் இணைப்பு உள்ளது. கட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு கடந்த மாதம் 8 ஆம் தேதி விண்ணப்பித்து அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டனர். தற்காலிக மின் இணைப்பை புதிதாக வழங்குவதா? அல்லது ஏற்கனவே இருந்த பழைய இணைப்பை தற்காலிக மின் இணைப்பாக மாற்றுவதா? என்று முடிவு செய்ய அந்த பகுதி மின்வாரிய அதிகாரிக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதற்குள் பறக்கும்படையினர், கூடுதல் கட்டணம் விதித்துவிட்டனர். அந்த கட்டணத்தையும் மேயர் தரப்பில் இருந்து செலுத்திவிட்டார்கள். மின்வாரிய தரப்பில் ஏற்பட்ட குழப்பத்தில் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். திருப்பூர் தாராபுரம் ரோடு புதுக்காடு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வீடு உள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications