திருப்பூரில் ராபிடோவில் சென்ற இளம்பெண்! நள்ளிரவில் செல்போனுக்கு வந்த வீடியோ! டிரைவரின் கேவலமான செயல்
திருப்பூர்: திருப்பூரில் ரேபிடோ புக் செய்து பைக் டேக்ஸியில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு, அதே நாள் இரவில், வாட்ஸ் அப்பிற்கு ஆபாச மெசேஜ்கள் மற்றும் வீடியோக்கள், தொடர்ந்து அழைப்புகள் என வந்துள்ளது. ரேபிடோ பைக் ஓட்டிய நபர்தான் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டு இருக்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடைக கார்கள், பைக்குகளை புக் செய்து பயணிக்கும் பழக்கம் பயணிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெருநகரங்களில் ரேபிடோ பைக் டேக்சி ரொம்பவே பிரபலமாக உள்ளது.

அநாகரீக சம்பவம்
ரேபிடோ செயலிகள் வழியாக இளைஞர்களும் இளம்பெண்களும் அதிக அளவில் பைக் டேக்ஸியில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால், இதுபோன்ற செயலிகளில் புக் செய்யும் பயணிகளில் நம்பரை பெற்று அவர்களிடம் ஒரு சில பைக், கார் டிரைவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் தமிழ்நாட்டின் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஆபாச படங்கள்
திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரேபிடோ செயலியில் பைக் புக் செய்து பயணித்துள்ளார். பயணம் முடிந்த பிறகு, அந்த பெண்ணுக்கு இரவில் வாட்ஸ்அப்பில் ஆபாச செய்திகளையும், ஆபாசப் படங்களையும் அனுப்பி ரேபிடோ கேப்டன் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதுபற்றி அந்த பெண்ணின் உறவினர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த அக்டோபர் 16 அன்று, தனது உறவினர் பெண் ஒருவர், ரேபிடோ புக் செய்துள்ளார். ரைடு முடிந்த பிறகு, ஓட்டுநர் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை செயலி வழியாக எப்படியோ பெற்றுக்கொண்டு, அதே நாள் இரவில் பலமுறை அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். இரவு 11 மணியளவில், அந்த ஓட்டுநர் ஆபாசப் படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி, வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொந்தரவு செய்து இருக்கிறார்.
பெரும் அச்சுறுத்தலாக உள்ளது
நடந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண், தான் ஊர் திரும்பிய பிறகே என்னிடம் கூறினார்" என்று கூறியுள்ளார். இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க ரேபிடோ நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளர். இது தொடர்பாக அந்த நெட்டிசன் மேலும், கூறுகையில், ரேபிடோவைப் பயன்படுத்துவது பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
நெட்டிசன்கள் கடும் கண்டனம்
ஓட்டுநர்கள் தொடர்புத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். திருப்பூர் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரேபிடோ பைக் சேவைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் அதிகம் பரவிய நிலையில், நெட்டிசன்கள் ரேபிடோ டிரைவரின் செயலை கண்டித்து பதிவிட்டு இருந்தனர். வாடிக்கையாளரின் தனிப்பட்ட மொபைல் எண்களை எடுக்கும் வகையில் செயலியில் குறைபாடு இருக்கிறதா? என்று கேட்டு நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு இருந்தனர்.
ரேபிடோ நிறுவனம் பதில்
இந்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ரேபிடோ, "வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமை... ஓட்டுநரின் தொழில்முறை அற்ற நடத்தைக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி வழங்கப்படும் என்றும், இதற்கென ஒரு பிரத்யேக குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications