கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டி.. வலியால் அலறுவதை கண்டு துடித்த திருப்பூர் மெக்கானிக்
திருப்பூர்: திருப்பூரில் சித்ரா என்ற பெண்ணுடன் கருப்பண்ணனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. ஆனால் இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் அதிகரித்து வந்த நிலையில், இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. எனினும், திருப்பூரில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் குறையவில்லை.
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியை சேர்ந்தவர் சித்ரா.. 36 வயதாகிறது.. சித்ராவுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கணவர் ஜான்சன், கடந்த 2020ல் கொரோனாவில் இறந்து விட்டார்.

சித்ரா - கள்ளக்காதலன்
எனவே தன்னுடைய 14 வயது மகளுடன் வசித்து வருகிறார் சித்ரா.. இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும், மெக்கானிக் கருப்பண்ணன் என்பவருடன் சித்ராவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு நெருங்கிய பழக்கமாகவும் மாறியிருக்கிறது.
கடந்த 2 வருடங்களாக இந்த பழக்கம் தொடர்ந்து வந்த நிலையில், திடீரென இவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டு, அடிக்கடி தகராறுகள் வெடித்துள்ளன..
எப்போது பார்த்தாலும் கருப்பண்ணன் தகராறு செய்வதால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ரா கருப்பண்ணனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்... மேலும் கருப்பண்ணனால் தனக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இது தொடர்பாக அவிநாசி பாளையம் காவல் நிலையத்திலும் புகார் தந்துவிட்டார்.
ஒப்புதல் வாக்குமூலம்
இந்த புகாரை போலீசார் விசாரித்ததுடன், இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. பிறகு, இருவருக்குள் எந்த வித தொடர்பும் இல்லை என எழுத்துப்பூர்வமாக இருவரும் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துவிட்டனர்.
ஆனாலும் சித்ராவுடனான தொடர்பை கருப்பண்ணனால் கைவிட முடியவில்லை.. சித்ராவிடம் பேசாமலும் இருக்க முடியவில்லை.. எனவே, சித்ராவிடம் மீண்டும் பேச வந்துள்ளார் ஆனால் சித்ரா அதற்கு சம்மதிக்கவில்லை.. உடனே ஆத்திரமடைந்த கருப்பண்ணன் சித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது
அதுமட்டுமல்ல, இன்று காலை சித்ரா தன்னுடைய மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அங்கு வந்த கருப்பண்ணன் தன்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.. அத்துடன் சித்ராவின் வீட்டிற்குள் வரவும் முயற்சி செய்துள்ளார்.
108க்கு போன போன்
ஆனால் அவரை சித்ரா தடுத்துள்ளார்.. இதனால் மேலும் ஆவேசம் அடைந்த கருப்பண்ணன், தான் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சித்ராவை வெட்டினார்.. கை மற்றும் கால்களை சரமாரியாக வெட்டியதில், சித்ராவின் இடது கை உடைந்து தொங்கியது.
வலியால் அலறி துடித்த சித்ராவை பார்த்து, கள்ளக்காதலன் கருப்பண்ணனுக்கு பரிதாபம் வந்துவிட்டது.. உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவைத்தார்.. சித்ராவை அந்த ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்..
பிறகு தன்னுடைய நண்பர்களிடம் சென்று, சித்ராவை வெட்டி விட்டேன் என்று கண்ணீருடன் சொல்லி உள்ளார்.. இறுதியாக அவிநாசி பாளையம் போலீசாரிடமும் தானே சரணடைந்தார் கருப்பண்ணன்.
கள்ளக்காதலன் சரண்
இந்த சம்பவம் குறித்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... ஆனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்ராவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அங்குள்ளவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள்... ஆபத்தான நிலையில் சித்ராவுக்கு சிகிச்சை நடந்து வருகிறதாம்.
தன்னிடம் பேச மறுத்த கள்ளக் காதலியை அறிவாளால் வெட்டிவிட்டு,. அவரை சிகிச்சைக்கு கள்ளக்காதலனே மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications