உடுமலையில் குபீர்னு வந்த வால்.. பைக் பெட்ரோல் டேங்கில் கொம்பேறி மூக்கன்.. திருப்பூரில் நம்பவே முடியல
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி பாம்புகள் வந்துவிடுகிறதாம்.. வீடுகள் உள்ள பகுதிகளில் பாம்புகள் அடிக்கடி தென்படுவது, அங்குள்ள பொதுமக்களை கலக்கத்துக்கு ஆளாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடுமலையில் நடந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோடை காலங்களில் வறட்சி காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வந்துவிடுவது வழக்கமாகிவிடும்.. ஆனால் இப்போது நவம்பர் மாதம் குளிர் காலம் துவங்கியிருக்கும் நிலையில், பாம்புகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

அதிலும் சேலம் மாவட்டத்தில் பாம்புகள் தொல்லை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.. நேற்று முன்தினம் எடப்பாடி பஸ் ஸ்டாண்டிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது..
அங்குள்ள வெள்ளாண்டி வலசு பகுதியில் வசித்து வரும் முத்து என்பவர், எடப்பாடி பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு மதியம் சாப்பிட சென்றிருக்கிறார்.. ஹோட்டல் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று சாப்பிட்டு கொண்டிருந்தார்..
மோட்டார் சைக்கிளில் பாம்பு
அப்போது அங்கு தரையில் ஊர்ந்தபடியே பாம்பு ஒன்று வந்து, ஹோட்டல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முத்துவின் ஸ்கூட்டருக்குள் புகுந்துவிட்டது.. மதிய நேரத்தில் பாம்பை பார்த்ததுமே அங்கிருந்தவர்கள் பீதியில் அலறினார்கள்.
உடனே தகவலறிந்து வந்த எடப்பாடி தீயணைப்பு படை வீரர்கள் பாம்பை பாடுபட்டு மீட்டனர். ஸ்கூட்டரின் உட்பகுதிக்குள் பாம்பு இருந்ததால் அதை உடனே வெளியே முடிக்காமல் திணறினார்கள். பிறகு விஷமுள்ள அந்த பாம்பை பத்திரமாக பிடித்து கொண்டுபோய், வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டு விட்டனர்.
இப்போது திருப்பூர் மாவட்டத்திலும் பாம்புகள் சலசலப்பு அதிகரித்துவிட்டதாக தெரிகிறது.. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது போடிப்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் கோபால்சாமி என்ற தொழிலாளி, நேற்றிரவு பைக்கில் உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பைக்கில் ஸ்பீடோமீட்டர்
நகராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, பைக்கில் ஸ்பீடோமீட்டர் அருகே திடீரென பாம்பின் வால் பகுதி வெளியே தெரிந்துள்ளது.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோபால்சாமி, உடனே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்திருக்கிறார்..
சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படைவீரர்கள், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. ஆனால் பாம்பு, பைக்கில் பெட்ரோல் டேங்க்கின் அடிப்பகுதிக்குள் பதுங்கி கிடந்தது.. இதனால் யாராலும் பாம்பை எளிதாக பிடிக்க முடியவில்லை.. நீண்ட நேரம் போராடியும் பாம்பை லாவகமாக பிடிக்க முடியாததால், பைக் மெக்கானிக் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டார்..
கொம்பேறி மூக்கன் பாம்பு
அந்த மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை மெக்கானிக் ஒவ்வொன்றாக பிரித்தார்.. அதற்கு பிறகுதான் பாம்பு வெளியே தெரிந்தது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள், அந்தப்பாம்பை பத்திரமாக பிடித்து வெளியே எடுத்துவிட்டனர்.. அந்த பாம்பு 4 அடி நீளம் இருந்தது.. கொம்பேறி மூக்கன் வகை பாம்பு என்கிறார்கள்..
பிடிக்கப்பட்ட பாம்பை தீயணைப்பு படைவீரர்கள், உடுமலை வனத்துறையிடம் ஒப்படைக்கவும், அந்த பாம்பு, உடுமலை வனப்பகுதியில் விடப்பட்டது.. எனினும் பாம்பை பிடிக்கும்வரை அந்த பகுதியே பெரும் பரபரப்பாகிவிட்டது.
திருப்பூர் - மலைகிராமங்கள்
இதே திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள மலைகிராமங்களிலும் பாம்பு கடி பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது.. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள்.. சாலை வசதி கேட்டு பல வருடங்களாகவே இவர்கள் போராடி வருகின்றனர்..
சில மாதங்களுக்கு முன்புகூட, 30 வயது சரவணன் என்பவர், திருமூர்த்தி நகரில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்..
இரவு நேரம் மலைப்பகுதி வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்துவிட்டது. ஆனால், மருத்துவ வசதி அங்கு இல்லாததால், மலை கிராம மக்கள் சரவணனை தொட்டில் கட்டி உடுமலை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இதுதொடர்பான போட்டோக்களும் அப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications