சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை!
திருப்பூர்: தமிழக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், விஜய் இன்று திருப்பூரில் ரோடு ஷோ நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு கடும் இழுபறிக்குப் பிறகு திருப்பூர் மாநகர போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில், விஜயை சந்திக்க வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழக்கம் போல், சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது தவெக தலைமை. பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது என கூறியுள்ளது அக்கட்சி.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக பிரசாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று ரோடு ஷோ மற்றும் பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நேற்று மாலை வரை உறுதியான முடிவு எடுக்கப்படாமல் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் கவலை அடைந்திருந்தனர். இதையடுத்து கட்சி தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தவெக விஜய்
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சில நிபந்தனைகளுடன் ரோடு ஷோ நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சென்னை நகரிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வர உள்ளார். அங்கிருந்து திருப்பூர் நோக்கி பயணம் மேற்கொள்வார். மதியம் சுமார் 3 மணியளவில் அவிநாசி கைகாட்டி பகுதியில் இருந்து ரோடு ஷோ தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் ரோடு ஷோ
அங்கிருந்து பெருமாநல்லூர் வழியாக திருப்பூர் மாநகரப் பகுதியான பூலுவபட்டி வரை ரோடு ஷோ நடைபெற உள்ளது. வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பிரசார வேனில் இருந்தபடியே விஜய் பொதுமக்களை சந்தித்து பேசுவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பூர் நகரில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த்
இந்நிலையில், விஜயை சந்திக்க வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழக்கம் போல், சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது தவெக தலைமை. இதுதொடர்பாக அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், இன்று (14.04.2026, செவ்வாய்) திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி பிரிவு வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தின் வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
விஜய் தேர்தல் பிரசாரம்
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
தேர்தல் ஆணைய விதி
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும், குறிபிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications