திருப்பூரில் பிரபல சொகுசு ஓட்டலில்.. அறை எண் 402ல் தொழில் அதிபர் இருந்த கோலம்.. ஆடிப்போன ஊழியர்கள்
திருப்பூர்: பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. தங்களது தொழில் சம்பந்தமாக திருப்பூர் மாநகருக்குள் வரும் தொழிலதிபர்கள் இதுபோன்ற ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி இருப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் அறை எடுத்து தங்கி உள்ளார். அங்கு சொத்து பிரச்சனை பேசி தீர்க்க உறவினரை ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.இறுதியில் நடந்த சம்பம் திருப்பூரையே ஆடிப்போக வைத்துள்ளது.
பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. தங்களது தொழில் சம்பந்தமாக திருப்பூர் மாநகருக்குள் வரும் தொழிலதிபர்கள் இதுபோன்ற ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி இருப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமரன் தொழில் அதிபர்.

இன்று காலை திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் 4 வது மாடியில் 402-ம் எண் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அவரது உறவினரான பல்லடம் பகுதியில், பனியன் துணி வியாபாரம் செய்து வரும் செந்தில்நாதன் என்பவரை ஹோட்டல் அறைக்கு அழைத்து உள்ளார்.
அங்கு வந்த செந்தில்நாதன் உடன் நடந்த பேச்சு வார்த்தையில், உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரம் அடைந்த அமரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்நாதனின் வயிறு மற்றும் கழுத்தில் குத்தியும், அறுத்தும் உள்ளதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து வெளியே வந்த செந்தில்நாதன் 3வது மாடியில் அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்தார்.
இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் கொலை செய்யப்பட்ட செந்தில்நாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை செய்த அமரனை ஹோட்டல் அறையில் வைத்து கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் முதல் கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட செந்திலும் கொலையாளி அமரனும் உறவினர்கள் என்பதும், இருவருக்கிடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்ததாகவும் இன்று அதனை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று ஹோட்டலில் அமரன் அறையெடுத்து தங்கி செந்தில் நாதனை வரவழைத்துள்ளாராம்.
அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இருவருக்குள்ளும் எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில், ஏற்கனவே தான் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் நாதனின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் அமரன் குத்தியதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி கழுத்தையும் அறுத்துள்ளாராம். ரத்த வெள்ளத்தில் அவரிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்ற செந்தில்நாதன் மூன்றாவது மாடிக்கு வந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications