திருப்பூரில் கல்யாணம் ஆன பெண்ணை திருமணம் செய்த 13 வது நாளில்.. புதுமாப்பிள்ளை இருந்த கோலம்
திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுதம் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண்ணுடன் பழகி உள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.இந்த காதலை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான 13 நாளில் மனைவியுடன் அவருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.
ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் மறு திருமணம் செய்யும் போது, வாழ்க்கையை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். கணவனை பிரிந்து வாழும் பெண்ணை தேர்வு செய்யும் ஆண்கள் அல்லது மனைவியை பிரிந்து வாழும் கணவனை தேர்வு செய்யும் ஆண்கள், எல்லா விவரங்களையும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் விவாகரத்து முறையாக ஆகிவிட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல் பழைய விஷயங்களை மறந்து இருவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும். அதேநேரம் தகராறுகள் ஏற்பட்டால் இருவரும் அமர்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். இந்த வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டதே என்று தவறான முடிவெடுக்கக் கூடாது. வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கக்கூடாது. திருப்பூர் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த 31 வயதாகும் கௌதம் என்பவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது 29 வயதாகும் திருமணமான பெண் கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த 29 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஒன்றாக இருக்க தொடங்கி உள்ளார்கள்.
இதையொட்டி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த நவம்பர் 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் வசித்தனர். கல்யாணம் ஆன பின்னர் தம்பதி இடையே கருத்து வேறுபாடுகள் சில விஷயங்களில் ஏற்பட்டுள்ளது. அப்படித்தான். சம்பவத்தன்று இரவு தகராறு ஏற்பட்டதாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவுதம், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர்.
தீக்காயங்களுடன் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கவுதம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 13 நாட்கள் ஆன நிலையில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications