ஜெயலலிதா மரணத்துக்கான காரணம் என்ன?.. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய நீதியரசர் ஆறுமுகச்சாமி!
திருப்பூர்: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு இதய பிரச்சினைக்கு முறையான சிகிச்சை அளிக்காதே காரணம் என திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நீதியரசர் ஆறுமுகச்சாமி பரபரப்பாக பேசினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தின் நீதியரசர் ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினராக பங்கேறார்.
பாரதியார் பல்கலைக்கழக அளவில் நன்கு படித்த மாணவிக்கு தங்கப்பதக்கம், பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில்
இளநிலை,முதுநிலை பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற 470 மாணவ மாணவிகள் மாணவர்களுக்கு பட்டங்களும் கேடயங்களும் வழங்கினார். அதன்பிறகு மாணவர்கள் மாணவர்களிடையே ஆறுமுகசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சசிகலா வீட்டில் பரபரப்பு.. விவேக்கின் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சி.. தீவிர சிகிச்சை.. என்னாச்சு

ஆஞ்சியோகிராம்
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஜெயலலிதா மரணம் தொடர்பாக கொடுத்த அறிக்கையில் சந்தேகம் இல்லை என தெரிவித்து இருந்தது. இதில் ஏன் சந்தேகம் உள்ளது என கூறினேன் என்றால் ஜெயலலிதா அவர்களுக்கு இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம். இதுதான் மிக முக்கிய பிரச்சனையாக தெரிவிக்கப்பட்டது. அதில் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்திருக்க வேண்டும். ஏன் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதுதான் கேள்வியாக இருந்தது.

அறுவை சிகிச்சை
இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதயத்தில் வெஜிடேஷியன் என்ற கால்சியம் டெபாசிட்டர் மற்றும் இதயத்தில் சிறிய துவாரமும் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாக இருந்துள்ளது.

நிராகரிப்பு ஏன்?
இதுபற்றி எய்ம்ஸ் மருத்துவமனை கருத்து தெரிவித்தது. மூன்று டாக்டர்கள் ஆஞ்சியோகிராம் சிகிச்சை தேவை இல்லை என கூறியதாகவும், அதில் ஒருவர் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று தெரிவித்ததாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் பரிசோதனை செய்யவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவ அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

அடுத்த இலக்கு என்ன?
மிகப்பெரிய மருத்துவமனை கூறிய அறிக்கையை நீங்கள் எவ்வாறு நிராகரிப்பு செய்தீர்கள். நீங்கள் என்ன பெரிய மருத்துவரா என கேள்வி கேட்டனர். அப்போது நானும் பட்டம் படித்து சட்ட கல்லூரியில் படித்து பலருடன் பழகி பல வழக்குகளை சந்திப்பதில் ஏற்பட்ட அனுபவம் தான் என்னால் சரியான காரணங்களை கூற முடிகிறது. அதனால் மாணவர்களும் நன்று படித்து பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அடுத்து பயணிக்கும் இலக்கு நன்றாக இருக்க வேண்டும் அதற்கு நல்ல படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்'' என்றார்.

பரபர குற்றச்சாட்டுகள்
முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 75 நாள் சிகிச்சைக்கு பிறகு 2016ல் மரணமடைந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரித்து சமீபத்தில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன்
குறிப்பாக சசிகலா, டாக்டர் கேஎஸ்சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.