திருப்பூருக்கு பேரிடியை இறக்கிய அமெரிக்கா.. டிரம்பால் தலைகீழாக மாறப்போகுது.. பறந்த கோரிக்கை
திருப்பூர்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்திருப்பதன் காரணமாக, திருப்பூர் மின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதேபோல் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கான வரி விதிப்பை குறைத்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட அறிவிப்பும் புதிய சிக்கலை திருப்பூருக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அறிவித்துள்ளார். இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது இந்த வரி விதிப்பால் திருப்பூர் மின்னலாடை ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகி வரும் சூழலில் மீண்டும் பேரிடியை அமெரிக்கா இறக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கான வரி விதிப்பை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு வரி குறைப்பு
இதன் மூலம் 30% இருந்த வங்கதேசத்தின் வரி 20 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோல் பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரியையும், இலங்கைக்கு 20% வரியையும் அறிவித்துள்ளது இதன் மூலம் நமது போட்டி நாடுகளுக்கு குறைவான வரி இருப்பதால் இந்தியாவிற்கான அமெரிக்க ஆர்டர்கள் பெருமளவு குறையும் நிலை உருவாகி இருக்கிறது.
அமெரிக்காவிற்கு 39 சதவீதம் ஏற்றுமதி
ஏற்கனவே அமெரிக்காவிற்கு 30 சதவீத ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடைபெற்று வரும் சூழலில், இந்தியாவிற்கான வரி விதிப்பு 25 சதவீதம் என்பதால் ஆர்டர்கள் குறைய வாய்ப்பு உருவாகி இருந்த சூழலில் தற்பொழுது போட்டி நாடுகளுக்கு வரியை மேலும் குறைத்துள்ளதால் அமெரிக்க ஆர்டர்கள் முற்றிலும் கைவிட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், "அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்த இந்தியாவின் சதவீத வரி நேற்று அமலுக்கு வந்த சூழலில் இன்று மறு அறிவிப்பாக நமது போட்டி நாடுகளுக்கான வரி விதிப்பை குறைத்து வெளியிட்டுள்ளார் இது நமது ஏற்றுமதியை வெகுவாக பாதித்துள்ளது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications