Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலி வாசம்.. திருப்பூரில் இப்படியொரு பெண்ணா? ஆளை பார்த்தால் வயசான மாதிரி இருக்கே? அதிர்ந்த 20 ஆண்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் போலீசாரிடம் பதறியடித்து கொண்டு ஓடியிருக்கிறார் இளைஞரின் பெற்றோர்.. என்ன நடந்தது? யாரந்த இளைஞர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 35 வயதாகிறது.. தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி வைத்திருக்கிறார்.. அத்துடன், கால்நடை தீவனம் விற்பனை நிறுவனமும் நடத்தி வருகிறார்.

tiruppur dharapuram Wife

35 வயதாகியும் இவருக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை.. எனினும், உறவினர்கள் விடாமல் இவருக்காக பெண் தேடி வந்தார்கள்.. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, "அம்பி டேட் தி தமிழ் வே" என்ற இன்டர்நெட் ஆப் மூலம் இளம்பெண் ஒருவர் தாராபுரம் இளைஞருக்கு பழக்கமானார்.


செல்போன் பேச்சு:
இந்த பெண் ஈரோட்டைச் சேர்ந்தவர்.. இதையடுத்து, இவர்கள் இருவருமே தினமும் நீண்ட நேரம் போனில் பேச ஆரம்பத்திருக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் 2 பேரும் திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர்.. அதன்படியே, கோயிலில் வைத்து அப்பெண்ணுக்கு தாலி கட்டி, திருமணமும் செய்து கொண்டார் இளைஞர்.

திடுதிப்பென்று, மணப்பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு வந்து தங்கள் மகன் நிற்பதை பார்த்ததுமே குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு, எப்படியோ நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொண்டதே போதும் என்று மகிழ்ச்சி அடைந்தார்கள்.. தங்கள் வீட்டுக்கு வந்துள்ள மணப்பெண்ணுக்கு, இளைஞர் குடும்பத்தினர் விழுந்து விழுந்து உபசரித்தார்கள்.

புதுமண தம்பதி: மணப்பெண்ணுக்கு தேவையான நகைகள், தங்க தாலிக்கொடி, புதிய பட்டுப்புடவைகள் என அனைத்தையுமே, இளைஞர் குடும்பத்தினரே வாங்கி தந்தார்கள்.. திருமணம் முடிந்து 3 மாதம் புதுமண தம்பதியினர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினார்கள்..

ஆனால், இளைஞர் குடும்பத்துக்கு மட்டும் அந்த பெண்ணின் மீது ஒருவித சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.. அதாவது, அந்த பெண், அவர்களிடம் சொன்ன வயதுக்கும் பெண்ணின் தோற்றத்திற்கும் கொஞ்சம்கூட சம்பந்தமேயில்லாமல் இருந்திருக்கிறது.. அதனால், அவரது ஆதார் கார்டை இளைஞரின் குடும்பத்தினர் பார்த்தபோது அதிர்ந்தே போய்விட்டார்கள்..

ஆதார் அட்டை: அந்த ஆதார் அட்டையில், கணவரின் பெயர் சென்னையை சேர்ந்த வேறொருவரின் பெயர் பதிவாகியிருந்தது. அத்துடன், வயதிலும் ஏகப்பட்ட வித்தியாசம் காணப்பட்டது.. இதையடுத்து, புதுமணபெண்ணை நேராக, தாராபுரம் மகளிர் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் ஒப்படைத்தனர்.. அவரது ஆதார் கார்டையும் போலீசில் தந்தனர்.

இதற்கு பிறகு போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது, இளைஞரின் குடும்பத்தினரைவிட அதிக அதிர்ச்சி அடைந்தனர்.. காரணம், அந்த பெண்ணுக்கு 10 வருடங்களுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் கல்யாணம் முடிந்துள்ளது.. ஒரு குழந்தையும் இருப்பதும் தெரிய வந்தது.

போலீஸ்காரர்:
இதற்கு பிறகு, கரூரில் போலீஸ்காரரை திருமணம் செய்துள்ளார்.. பிறகு, மதுரையில் இன்னொரு போலீஸ்காரரை திருமணம் திருமணம் செய்துள்ளார்.. அடுத்ததாக, கரூரில் ஒரு நிதி நிறுவன அதிபரை திருமணம் செய்துள்ளர்.. இப்படியே மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நபர்களை இப்பெண் திருமணம் செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

எப்போதுமே 35 வயதுக்கும் மேற்பட்ட கல்யாணமாக ஆண்களை மட்டுமே குறி வைப்பாராம் இந்த கல்யாண மங்கை.. அதேபோல, திருமணமான ஆண்களையும் விரட்டி விரட்டி காதலித்து கல்யாணம் செய்து கொள்வாராம்.

தலைமறைவு:
ஆனால், கல்யாணம் நடந்த 3வது மாதமே, கணவரிடம் ஏதாவது ஒரு காரணத்தை கிளப்பிவிட்டு, வேண்டுமென்றே தகராறை ஆரம்பிப்பாராம்.. இந்த தகராறு முற்றும்வரை கொண்டு சென்றுவிட்டு, கடைசி நாளில், கணவரிடமிருந்த நகை பணத்துடன் தலைமறைவாகி விடுவாராம்.. இப்படியே 20-க்கும் மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து, பணம், நகைகயுடன் தப்பி வந்துள்ளாராம் இந்த பெண்.

இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அப்பெண்ணை கைது செய்துள்ள போலீசார், விசாரணையையும் தீவிரப்படுத்தி வருகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+