திருப்பூர் மாநகராட்சி மேயர் யார்? வரிந்துகட்டி நிற்கும் அந்த 3 பேர்! பரபரக்கும் டாலர் சிட்டி!
திருப்பூர்: டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூர் மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்ற திமுகவில் 3 முக்கியப் பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் ஆகிய மூவரில் ஒருவரே மேயர் நாற்காலியில் அமருவார்கள் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.
தேர்தல் முடிவு வெளியான அடுத்தநாளே சென்னைக்கு சென்று முகாமிட்டு திருப்பூர் மேயர் பதவியை கைப்பற்ற அவரவர் தனி லாபி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 37 வார்டுகளில் பெற்றிபெற்றிருக்கிறது. இதன் மூலம் மேயர் பதவியை இந்த முறை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் திமுகவில் யார் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்கள் என்பது தான் இப்போது அங்கு எழுந்துள்ள மில்லிடன் டாலர் கேள்வியாகும். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் மேயர் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.

யார் மேயர்?
கட்சியில் படிப்படியாக உயர்ந்து இன்று மாவட்டப் பொறுப்பாளர் வரை பத்மநாபன் வந்திருக்கிறார். இவரை மேயராக்க அமைச்சர் சாமிநாதன் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்வார் எனத் தெரிகிறது. இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமியும் மேயர் கனவுடன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேமுதிகவிலிருந்து திமுகவில் இணைந்த தினேஷும் மேயர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கூட்டணிக் கட்சிகள்
இதனிடையே திருப்பூர் மாநகராட்சியை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிடம் எதிர்பார்த்து வருவது கூடுதல் தகவலாகும். ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு என்றும் துணை மேயர் பதவி வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சிக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ ஒதுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

முக்கிய மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை வளம் கொழிக்கும் மாநகராட்சியாக பார்க்கப்படுவதால் அங்கு மேயர் பதவிக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. மேயர் பதவியை குறிவைத்து மூன்று பேர் கொண்ட மும்முனைப் போட்டியில் இல.பத்மநாபன் முந்திநிற்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications