செக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்

திருப்பூர் இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்

    திருப்பூர்: "பல பெண்களுடன் தொடர்பு இருக்கு, எனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. அவர் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்" என்று பெண் ஒருவர் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதிமா என்கிற ராணி. இவருக்கு 32 வயதாகிறது. இவர் திருப்பூரில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளர். அந்த புகாரில் உள்ள சுருக்கம் இதுதான்:

    எனக்கு கல்யாணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், குழந்தையுடன் தனியாக வசித்து வந்தேன். திருச்சியில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது, என் முதல் கணவர் என்னை போனில் டார்ச்சர் செய்தார்.

    இன்ஸ்பெக்டர்

    இன்ஸ்பெக்டர்

    இதை பற்றி புகார் தர திருச்சியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். என்னை புகார் தர அழைத்து சென்றவர், அங்குள்ள இன்ஸ்பெக்டருக்கு மனைவி இறந்துவிட்டதால், மகனுடன் தனியாக வசிப்பதாக சொன்னார். விருப்பப்பட்டால் நீங்கள் இன்ஸ்பெக்டரை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றார். நான் கண்டுகொள்ளவில்லை.

    குழந்தை

    குழந்தை

    ஆனால் என் செல்போன் நம்பர் தெரிந்து கொண்டு இன்ஸ்பெக்டர் என்னுடன் பேச ஆரம்பித்தார். நானும் பேசினேன். கல்யாணம் செய்து கொண்டு, என்னையும், குழந்தையையும் நன்றாக பார்த்து கொள்வதாக சொன்னார். குழந்தையின் பாதுகாப்பு கருதி கல்யாணத்துக்கு சம்மதித்தேன். திருச்சியில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

    கல்யாணம்

    கல்யாணம்

    அக்கம் பக்கத்தினர் என்னை தப்பாக பேசுவதால், கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அவர், என் மகனுக்கு உன்னை பிடிக்கட்டும், அப்பறம் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றார். இந்த சமயத்தில் ஈரோடு, திருப்பூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவும் அங்கெல்லாம் சென்றோம். இறுதியில் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் பணி கிடைத்தது.

    செக்ஸ் டார்ச்சர்

    செக்ஸ் டார்ச்சர்

    இதனிடையே அவரது மகன் என்னை அம்மா என ஏற்று கொண்டதால், என் சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தின் ஒரு கோயிலில் கல்யாணம் செய்து கொண்டோம். ஆனால் அவருக்கு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரியவந்தது. இதை பற்றி கேட்டபோது, அடித்து உதைத்தார். எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். இது பற்றி திருப்பூர் துணை போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் தரவும், அவர் இவரை கூப்பிட்டு எச்சரித்தார்.

    பலத்த காயம்

    பலத்த காயம்

    இதனால் ஆத்திரப்பட்டு, என்னை அடித்து உதைத்தார். கை, கால்களில் பலத்த காயமும் ஏற்பட்டது. கொலை மிரட்டலும் விடுத்ததுடன், உன் அம்மா வீட்டிற்கு போ என்றும் மிரட்டுகிறார். அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும், அல்லது, பணியில் இருந்து அவரை நீக்க வேண்டும்" என்றார்.

    இன்ஸ்பெக்டர் மறுப்பு

    இன்ஸ்பெக்டர் மறுப்பு

    ஆனால் ராணி கூறிய குற்றச்சாட்டுக்கு இன்ஸ்பெக்டர் மறுப்பு தெரிவித்து உள்ளார். "என் மகனை கவனிக்க வேலைக்கு ஆள் தேடும்போதுதான் ராணி அறிமுகம் ஆனார். வேலைக்கும் சேர்த்தேன். நான் டிரான்ஸ்பர் விஷயமாக சென்ற நேரங்களில், திருப்பூரை சேர்ந்த ஒருவருடன் கார் மற்றும் பைக்கில் சுற்றுவதாக தெரிந்தது. இதனை தட்டி கேட்டேன். இதற்கு ஆத்திரப்பட்டு, ஜீப் கண்ணாடியை உடைத்துவிட்டு வீட்டில் இருந்த 45 பவுன் நகைகளை திருடி கொண்டு சென்று விட்டு என் மீது இந்த புகாரை கொடுத்துள்ளார்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+