10க்கு மேற்பட்ட ஆண் நண்பர்கள்.. கேட்டால் சித்தப்பா பெரியப்பான்னு சமாளிப்பு.. கவிதாவின் பரிதாப முடிவு
இளம்பெண்ணை எரித்து கொன்றது குறித்து இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
திருப்பூர்: "கவிதாவுக்கு 10-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பு இருக்கு.. ஒவ்வொருத்தரும் போன் பண்ணிட்டே இருந்தாங்க.. எல்லாரிடமும் சிரித்து சிரித்து பேசினார். யார் என்று கேட்டதற்கு, அண்ணன், தம்பி, சித்தப்பா, என்று புதுசு புதுசாக உறவு முறை சொன்னார்.. ஆத்திரத்தில் கொன்று தீ வைத்துவிட்டேன்" என்று இளைஞர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்தான் கவிதா. 30 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.. ஆனால், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தனியாக பிரிந்து வந்துவிட்டார்.. குழந்தைகளையும் அவரிடமே விட்டுவிட்டு வந்துவிட்டார்.
4 வருஷமாக தூத்துக்குடியில் ஒரு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். அங்கேயே ஒரு லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் எட்வின் என்பவர் பழக்கமானார். காதலும் வளர்ந்தது.. போன வருஷம் கல்யாணமும் செய்து கொண்டனர்.

கருகிய நிலை
இந்நிலையில், 3 நாளைக்கு முன்பு கவிதாவை காணோம். அதனால் அவரை எட்வின் தேடி வந்தார். அப்போதுதான், உடல் கருகிய நிலையில் கவிதா விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக கிடந்தார் என்று தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடி விசாரணை மேற்கொண்டனர்.
கவிதாவின் கை, கால்களில் ரத்த காயங்கள் இருந்தன.. அடையாளமே தெரியாத வகையில் உடல் எரிந்து போய் இருந்தது..

விசாரணை
அந்த வீட்டின் கதவை தனியாக கழற்றி எடுக்கும்படி இருந்தது.. அதனால் கவிதாவை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், ஆட்டோ டிரைவர் கருப்பசாமிதான் வீட்டிற்கு வந்து போனதாக சொன்னார்கள். இதையடுத்து கருப்பசாமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. அப்போது போலீசாரிடம் கருப்பசாமி அளிக்க வாக்குமூலம் இதுதான்:

ஆண் நண்பர்கள்
"கவிதா வேலை பார்த்த இடத்தில் நிறைய ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பை வைத்திருந்தார். எல்லாரிடமும் தனது செல்போன் நம்பரையும் தந்து வைத்தார். இப்படிதான் நான் பழக்கமானேன். ஆனால் இந்த விஷயம் எட்வினுக்கு தெரிந்து கவிதாவை அடித்து உதைத்தார். 8ந்தேதி நைட் எட்விட் வேலைக்கு போய்விட்ட பிறகு, எனக்கு போன் பண்ணி கவிதா வர சொன்னார்.

செல்போன்
எட்வினிடம் இருந்து என்னை காப்பாற்றும்படி சொல்லவும், நான் விவேகானந்தா நகரில் ஒரு வீடு எடுத்து 2 நாளைக்கு முன்னாடி கவிதாவை குடிவைத்தேன். அங்குதான் 2 பேரும் தங்கினோம். 10 ந்தேதி நைட் 2 பேரும் தனியாக இருந்தோம். அப்போ, கவிதாவுக்கு செல்போன் வந்து கொண்டே இருந்தது. முதலில் நான் எதுவும் கேட்டுக்கல.. தொடர்ச்சியாக வந்த 5 போன்களை எடுத்து பேசினார்.. எல்லாரிடமும் சிரித்து சிரித்து பேசினார். யார் என்று கேட்டதற்கு, ஒவ்வொருவரையும், அண்ணன், தம்பி, சித்தப்பா, என்று புதுசு புதுசாக உறவு முறை சொன்னார்.

கழுத்தை நெரித்தேன்
இதற்கு அப்பறமும் ஒரு போன் வந்தது, அதில்தான் ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தார். சாதாரணமாக பேசாமல் மெல்லிய குரலில் பேசவும் எனக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் கீழே கிடந்த விறகுக்கட்டையை எடுத்து தலையில் அடித்துவிட்டேன். உடனே அக்கம்பக்கத்தினரிடம் சென்று இதை சொல்ல கதவை திறக்க முயன்றார். நான் அப்போது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். மண்ணெண்ணையை மேல ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டேன்" என்றார்.

விசாரணை தீவிரம்
10-க்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் கவிதாவுக்கு உண்டாம்.. அவர்களிடம்தான் எந்நேரமும் பேசிக் கொண்டே இருப்பாராம்.. புருஷன், காதலன் எட்வின், கள்ளக்காதலன் கருப்பசாமி தவிர, மீதமுள்ள அந்த 10 பேர் யார் என்று தெரியவில்லை.. விசாரணை நடக்கிறது!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications