வெறும் 70 ரூபாய்க்காக.. ஒரு பச்சிளம் குழந்தையை.. அதிர வைத்த திருச்சி சம்பவம்.. !
திருச்சி அருகே 70 ரூபாய்க்காக ஒரு குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது
Recommended Video
திருச்சி: வெறும் 70 ரூபாய்க்காக ஒரு பச்சிளம் குழந்தை அடித்து கொல்லப்பட்ட பயங்கரம் திருச்சி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அலகரை கல்லுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கர். இவர் விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு நித்தீஸ்வரன் என்ற 15 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், நித்தீஸ்வரனை தூக்கிவைத்துக்கொண்டு வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் அங்கு வந்து ரெங்கரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், ரெங்கரின் உறவினர் செந்தில் என்பவர், ஆனந்தனின் சட்டை பையில் கையைவிட்டு, 70 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டார். இதனை கண்ட ரெங்கர், 'ஏன் ஆனந்தனிடம் பணத்தை எடுத்தாய்' என செந்திலிடம் கேட்டார். இது ரெண்டு பேருக்கும் வாய்த்தகராறு வரை வந்துவிட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் கிடந்த மூங்கில் கம்பை எடுத்து ரெங்கரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். அந்த அடி, தூக்கி வைத்துக் கொண்டிருந்த 15 மாத குழந்தை நித்தீஸ்வரன் மீதும் விழுந்தது. இதில் ரெங்கனுக்கு தலையில் காயம், குழந்தைக்கு உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, செந்திலை கைது செய்தனர். வெறும் 70 ரூபாய்க்காக ஒரு தகராறு ஏற்பட்டதும், அதன் மூலம் 15 மாத குழந்தை அடித்து கொல்லப்பட்டதும், மாவட்ட மக்களை கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications