கொடுமை.. கையை அசைத்து, பேசிக்கொண்டிருந்த குழந்தை.. கண் முன்னே நழுவி இப்போ எதுவுமே தெரியல
Recommended Video
திருச்சி: கொடுமை.. இது மிகவும் கொடுமை.. கண்முன்னாலேயே தன்னுடைய குழந்தை படிப்படியாக பூமியின் ஆழத்திற்குச் சென்று கொண்டே இருப்பதை பார்க்க கூடிய மிகப்பெரும் கொடுமை ஆரோக்கியதாஸ் மற்றும் மேரி தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது.
2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை விழுந்தபோது, 26 அடி ஆழத்தில் தான் இருந்தார். அவரை எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பிக்கை அதிகமாக காணப்பட்டது.
ஏனெனில் ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமரா, குழந்தையின் உருவத்தை படம்பிடித்தது. ஆக்சிஜன் அனுப்புவதும், எளிதாக இருந்தது. அவ்வளவு ஏன்? குழந்தை அழுவது கூட வெளியே கேட்டது. குழந்தையின் தாய் பேசியதற்கு குழந்தை 'உம்' என்று பதிலும் சொன்னது.

சுறுசுறுப்பான சுஜித்
சுறுசுறுப்பு, துடுக்கு மற்றும் துறுதுறுப்பு கொண்ட குழந்தையாம் சுஜித். அவர் உறவினர்கள் சொல்கிறார்கள். எனவே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி கொண்டிருந்தாலும் கூட தைரியமாகவே காணப்பட்டது அந்த குழந்தை. ஆரம்பத்தில் எல்லாம் தைரியத்தோடு தான் குழந்தை பதில் சொன்னது. ஆனால் நீண்ட நேரமாக ஈரமான மணலுக்குள் இருந்ததாலும், தண்ணீர் மற்றும் உணவு உண்ணாததாலும் போகப்போக குழந்தையின் குரலில் நடுக்கம் தென்பட்டது. இது தவிர குழந்தை ஓரளவுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது என்று நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.

திடீரென பின்னடைவு
ஆனால் இன்று அதிகாலை மீட்பு பணிகளில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக அந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இவ்வாறு சுஜித் சென்றபோது அவரது தலைக்கு மேல் ஆள்துளை கிணற்றில் இருந்த மணல் விழுந்துவிட்டது. அதுவரை சிறுவன் கையை அசைத்து அதை கேமராவில் பார்த்து வந்த அதிகாரிகளால் அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.

100 அடி ஆழம்
சுஜித் அழுகுரலும் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் அருகாமையில் நடக்கக்கூடிய பள்ளம் தோண்டும் பணிகள் காரணமாக சுஜித் மேலும் கீழே சென்று கொண்டே இருக்கிறார். இரவு 7 மணி அளவில் கிடைத்த தகவல்படி 100 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டார். இப்போது அவர், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

கண் முன்னாடியே
மணல் மேலே மூடியிருப்பதால் குழந்தையை கேமராவாலும் படம்பிடிக்க முடியவில்லை, கையை அசைத்து தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த குழந்தை படிப்படியாக இப்படி அத்தனை பேர் கண் முன்னாலும் அடி ஆழத்துக்குச் சென்றது எவ்வளவு பெரிய கொடுமை?

அதிருப்தி
இத்தனை தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் இந்த இரண்டு வயது குழந்தையை தங்கள் கண் முன்னாடியே இப்படி அடுத்தடுத்து ஆழத்திற்குச் செல்ல அனுமதித்து கொண்டிருக்கும் நமது சமூகத்தின் மீது நமக்கு கோபம் வரத்தான் செய்கிறது. சமூக வலைத்தளங்களில் அதன் வெளிப்பாட்டை பார்க்க முடிகிறது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications