விடிய விடிய குமுறலோடு காத்திருந்த சுஜித்தின் தாய்.. வேதனையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
சுஜித்தின் தாய் மேரி திடீரென மயங்கி விழுந்தார்
Recommended Video
மணப்பாறை: குழந்தை சுஜித்தின் நிலை கண்டு, அவரது தாயார் கலா மேரி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி பகுதியில் வேளாங்கண்ணி என்பவருக்கு சொந்தமான சோளக்காட்டில் 500 அடி ஆழ கிணற்றில் மேரியின் குழந்தை சுஜித் விழுந்துவிட்டான்.

நேற்று மாலை 5.30 மணிக்கு விழுந்தவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 13 மணி நேரத்தையும் தாண்டி குழந்தையை மீட்க முடியவில்லை. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை தற்போது வருகிறது.

இப்போதைக்கு குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுள்ளதால் அனைத்து தரப்புக்கும் ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது. நைட் நேரம் என்பதால் குழந்தை பயந்துவிடகூடாது என்பதற்காக சுஜித்தின் அம்மா மேரியை குழந்தையுடன் பேச வைத்தனர்.
ஆனால், மேரி குழந்தை விழுந்ததுமே அதிர்ச்சியடைந்து மயங்கிய நிலையிலேயே இருந்தார். இருந்தாலும், அவரை உறவினர்கள் தேற்றி அழைத்து வந்து, குழந்தையிடம் பேச வைத்தனர். அப்போது மேரி, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என்று சொன்னதற்கு, "உம்" என்று குழந்தை பதிலளித்தான். இதைகேட்டதும் அனைவருக்குமே ஒரு தெம்பு வந்தது.

ஆனால், நேரம் ஆக ஆக குழந்தை சோர்வாகி விட்டான். இது பெற்றோருக்கு பதட்டத்தையும்,பீதியையும் தந்து வருகிறது. ஆக்சிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருவதால், பயப்பட வேண்டாம் என்று பெற்றோருக்கு டாக்டர்களும், மீட்பு பணியினரும் நம்பிக்கை சொல்லி கொண்டே இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஆழ் துளைக் கிணற்றுக்குள், குழந்தையின் தலையைச் சுற்றிமண் விழுந்துள்ளது. இதனால் மீட்பு பணியில் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. தற்போது சுஜித்தின் சத்தம் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. குழந்தையின் நிலைமையை கண்டு கலாமேரி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து, அங்கிருந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications