சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் 5 பேர் லாரி மோதி பலி.. தஞ்சை அருகே சோகம்
திருச்சி தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடிபட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 25 பேர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது.
இதில், சின்னையன் மகன் முத்துசாமி (60), கார்த்திக் மனைவி மீனா (26), முருகன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனாம்பாள் என 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதா என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்து தொடர்பாக செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அதிகாலையில் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications