காதலன் கொலை.. காதலியை கடத்தி 4 பேர் கொண்ட கும்பல் கற்பழிப்பு.. இது திருச்சி பயங்கரம்
Recommended Video

திருச்சி: திருச்சி அருகே, கல்லூரி மாணவரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல், அவரது காதலியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் தமிழ்வாணன். அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் திருச்சி மாவட்டம் கோவண்டாகுறிச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரும் படித்து வந்தார்.

இருவரும் சில ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. பொங்கல் நாளில் இருவரும் சென்னை -திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள மலைமாதா கோவில் பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் இருவரும் ஊருக்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனர். மீண்டும் குமளூர் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு பேசி கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வந்தனர்.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவர்கள், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த தமிழ்வாணன், அந்த கும்பலை தட்டிக் கேட்டார்.
அப்போது, அவர்களில் ஒரு நபர் தான் வைத்திருந்த கத்தியால் தமிழ்வாணனை கத்தியால் குத்தியுள்ளார். அவர் மயங்கி அதே இடத்தில் சரிய... அந்த பெண்ணை 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் கடத்திச் சென்றனர்.
பின்னர் 4 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்துப்பட்ட கல்லூரி மாணவர் தமிழ்வாணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications