திருச்சியில் நாளை வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்! 13,000 பேருக்கு அறுசுவை சாப்பாடு! நேரு அமர்க்களம்
திருச்சி: திருச்சியில் நாளை 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக செய்து வரும் அமைச்சர் நேரு, 13,000 பேருக்கு அறுசுவை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறார்.

மாநிலம் முழுவதும் உள்ள திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில் - ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் வாரியாக சந்தித்தால் அவர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக உரையாட முடியும் , பயிற்சி அளிக்க முடியும் எனக் கருதிய முதல்வர் ஸ்டாலின் முதல் வேலையாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நாளை திருச்சியில் நடத்துகிறார்.
அதில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு , கடலூர் மேற்கு, மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர் வடக்கு , தஞ்சாவூர் மத்திய
தஞ்சாவூர் தெற்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு என 15 மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இவர்களுக்கான குடிநீர் முதல் மதிய உணவு வரையிலான அனைத்து வசதிகளையும் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான நேரு பார்த்து பார்த்து கவனித்து வருகிறார். டெல்டா மண்டலத்தை தொடர்ந்து தென் மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை மண்டலத்துக்கான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடைசியாக மேற்கு மண்டலம் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
என்.ஆர்.இளங்கோ எம்.பி., அப்துல்லா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அமைச்சர் சிவசங்கர், திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பேசவுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications