தினமும் ஒரு பொய்.. விஜய் பத்தியெல்லாம் யோசிக்கவேயில்லை! படக்கென பேசிய நடிகர் அருண் பாண்டியன்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி நான் சிந்திக்கவில்லை எனவும், அரசியலுக்கு வந்தால் தினமும் பொய் சொல்ல வேண்டியிருக்கும் எனவும், அதன் காரணமாகவே தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக நடிகரும், தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அருண் பாண்டியன் கூறியுள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் தயாரிப்பில் "அஃகேனம்" திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தில் அருண் பாண்டியன், அவரது இளைய மகள் கீர்த்தி பாண்டியன் ஆதித்யா சிவ்பிங்க் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், "அஃகேனம்" தமிழகம் முழுவதும் சென்று படத்துக்கு ப்ரோமோசன் செய்து வருகின்றனர், அந்த வகையில், "அஃகேனம்" படக் குழுவினர் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள மாரிஸ் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Actor Arun Pandian Vijay tvk

அப்போது நடிகர் அருண் பாண்டியன் கூறும் போது," குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக இந்த "அஃகேனம்" படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இளைய தலைமுறைக்கு வழிவிடும் நோக்கில் இளைஞர் இயக்க வேண்டும் என நினைத்தேன். நல்லது செய்றவங்க, அதுக்கு கெட்டது செய்றவங்க டபுள் அஹ் இருப்பாங்க. படம் குறித்து தவறாக சொல்லும் நோக்கில் நான் நடந்துகொண்டது இல்லை.

புது இயக்குனர் என்று இல்லை கதைக்காக தான் இயக்குனர். நாங்கள் வரும் போது எங்களை யாரும் மதிக்கவில்லை. நடிகர் சங்கம் குறித்து பேச யாரும் இல்லை. அரசியல் கடினமானது தினமும் பொய் சொல்ல வேண்டும். அரசியலை பற்றி சிந்திக்கும் எண்ணம் இல்லை. நம்ம குதிக்கவில்லை எவனாவது தள்ளி விடுகிறான். தற்போது அரசியல் பற்றி சிந்திப்பதே இல்லை.

போதை என்பது தப்புதான் யாராக இருந்தாலும். நடிகராக இருந்தாலும் சாதாரண மனிதனாக இருந்தாலும் போதை தவறுதான் அதை இந்த படத்திலேயே சொல்லி இருக்கிறேன். விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து நான் யோசிக்கவே இல்லையே. அதனால் அதை பத்தி பேச வேண்டாம். அவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார். இணைந்த கைகள் வேறொரு ரூபத்தில் செய்யலாம் இந்த வயதில் ஆக்சன் செய்ய முடியாது"என்றார்.

படத்தின் நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும் போது," திரைத் துறைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை 2015 ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறேன். அதன் ஈர்ப்பு காரணமாக தற்போது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து காதல் படங்கள் ஆக்சன் உள்ளிட்டவைகளில் நடிக்க இருக்கிறேன்" என தெரிவித்தார்.

அருண் பாண்டியன்: தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக வளம் வருபவர் அருண் பாண்டியன். இணைந்த கைகள், அன்பிற்கினியன், தேவன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் அரசியல்வாதி என்பது நிறைய பேருக்கு தெரியாது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த அருண்பாண்டியன் 2011 சட்டமன்றத் தேர்தலில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து விஜயகாந்த் உடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக செயல்பட்டார். தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் அருண்பாண்டியன் தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பி தயாரிப்பு இயக்கம் நடிப்பு என பிஸியாக வலம் வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+